ஸ்மாட் சிட்டி திட்டத்துக்காக 98நகரங்கள் தேர்வாகியுள்ளன. இவற்றில் 20 நகரங்கள் அடங்கிய முதல்கட்ட பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்த 98 நகரங்களும் 5ஆண்டு காலத்தில் திறன்மிகு நகரங்களாக உருவாக்கப்படும். இவற்றில் 24 நகரங்கள் மாநில தலைநகரங்கள் , 24 தொழில் வர்த்தக நகரங்கள்,18 கலாச்சாரம் மற்றும் சுற்றுலா சார்ந்த நகரங்கள்,5 துறைமுக நகரங்கள், 3 கல்வி மற்றும் மருத்துவம் சார் நகரங்கள் அடங்கும்.
இளம் இந்தியாவின் பேராவலை பூர்த்தி செய்யும் விதத்தில் ஒருங்கிணைந்த நீடித்த வளர்ச்சிக்கான கருவிகளாக ஸ்மார்ட் நகரங்கள் உருவாக்கபபடும். இந்திய மக்களின் பொருளாதாரம், உழைப்பு, மதிப்பு போன்றவற்றை உயர்த்தும் அருமையான திட்டங்கள். கேட்க நல்லா இருக்கு ஆனா கொஞ்சம் பயமா இருக்கு. இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் எத்ததை பேர் தங்கள் கைவரிசையை காட்டப்போகிறார்கள் என்று...
" தனி ஒருவன் " படத்தில் வரும் வசனம் என் நினைவுக்கு வருகிறது. எந்த ஒரு பெரிய விசயத்துக்கு முன்னாலையும் ஒரு சின்ன விசயம் இருக்கு. ஆக ஸ்மார்ட் சிட்டி திட்டத்த செயல்படுத்துறதால இந்ததிட்டத்தின் அதிகாரகளுக்கு நிச்சயம் லாபம் வரப்போகிறது. இல்லைன்னா "MAKE IN INDIA " வுக்காக வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பாதை அமைப்பதாக கூட இருக்கலாம்.
ஸ்மாட் சிட்டின்னு தடையில்லாமல் மின்சாரம், போக்குவரத்து, நெடுஞ்சாலை, குழாய் குடிநீர், தரமான தொலைதொடர்பு , நிலம்ன்னு எல்லாவற்றையும் நம் கண்முன்னே செயல்படுத்துவார்கள். அதேப்போல நம் கண்முன்னே வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தாரைவார்த்து கொடுப்பார்கள். ஏற்கனவே நம் ஊரில் இருக்கிற வெளிநாட்டு நிறுவனஙாகளால் நம் நீர் வளம் (தாமிரபரணி), நில வளம் (கனிமங்கள்), மின்சாரங்கள் , காற்று மாசுபாடு , பொருளாதாரம் , குடிசை தொழில் பாதிப்பு, சுரண்டல்னு பல சீர்கேடுகள் நடக்கிறது. இதுல இப்புடி புதுசா செய்தால் நாம் என்ன செய்வது? வழக்கமா அமைதியா இருக்கிறமாதிரி நாம் இப்போது இருக்க கூடாது.
ஒரு உண்மை என்னவெனில் "MAKE IN INDIA" , "SMART CITY" போன்ற திட்டங்களை ஆதிக்கும் அதிகாரிகளுக்கு பன்னாட்டு நிறுவனங்களுடன் தொடர்பு இருக்க வாய்ப்பு உள்ளது எனபதே. சும்மாவே ஆடு புலி ஆட்டம் ஆடுவாங்க , இப்ப சொல்லவா வேண்டும்???
ஆக ஸ்மார்ட் சிட்டி நகரத்திற்கு ஏதோ வழியில் , ஏதோ ஒரு முறையில் உள் நோக்கங்கள், உள் திட்டங்ள் இருப்பது நிச்சயம்...
நகர்புற மக்கள் தொகை 40 கோடியிலிருந்து, 2050-ல் 81.4 கோடியாக உயரும். தீவிர நகர்மயமாதலை சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா எதிர்நோக்கியுள்ளது. சீன மக்களுக்கு வேலையே நகர்புறங்களில்தான் ஆனால் இந்தியாவுக்குஅப்படியில்லை. இந்தியா என்றாலே விவசாயம். "இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம் ". இந்த இரு நாடுகளையும் ஒப்பிடுவது சரியல்ல . விவசாயத்தை அழிக்க நினைக்கும் புதிய முயற்சி இது. விவசாயத்துக்கு எதிரா இருக்கிற பன்னாட்டு நிறுவனங்கள் அதிக ஈடுபாடு காட்டுவார்கள். அவர்களுக்கு இந்த திட்டத்தின் உள்நோக்கம் பற்றி தெரியவாய்ப்புள்ளது.
நகர்புற மேம்பாட்டு துறையின் கீழ் வேளாண்மை மேம்பாட்டு துறை தூங்குகிறதா? அல்லது தூங்க வைக்கப்பட்டதா??? யாருக்கு தெரியும். நமக்கு மகிழ்சியான வாழ்வுக்கு நகரமா ? கிராமமா?ன்னு பட்டிமன்றங்கள்தான் வைக்கதெரியும்!!! கேபப்படாதீர்கள் ஆனால் உண்மை அதுதான்.
முதல்ல மற்ற நாடுகளுடன் நம்ம நாட்டை ஒப்பிடுவதை நிறுத்துவோம். நம்ம நாட்டு வளங்களை நாம் பயன்படுத்தி நம்ம நாட்டு பொருளாதாரத்தை உயர்த்துவோம். விவசாயத்துக்கு தடையாக நிற்கும் திட்டங்களை எதிப்போம்.