Thursday, 11 February 2016

நம் மொழி

        இந்தி மொழி மற்றும் பிற மொழிகள் நம் சமுகத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன. வந்தாரை வரவேற்பதுதான் தமிழரின் பண்பாடு, வந்தாராக மாறுவது இல்லை. ஆனால் தற்போது வந்தாராக மாறுவதாகவே நாகரீகமாக மாறிவிட்டது. இதனால் இந்தி மற்றும் பிற மொழி பேசும் சமுகத்திலிருந்து வந்த மக்களால் நம் சமுகம் பல சிதைவுகளை கண்டுள்ளது என்று வெளிப்படையாகவே கூறலாம். நாம் விளிப்புணர்வுடன் இருக்கவேண்டிய சூழல் இது.

        நம் நாகரீக உடைக்கலாச்சாரம் , மொழிக்கலாச்சாரம் , உறவுக்கலாச்சாரம் பாதிப்படையும் நிலைக்கு அவர்களும் ஒரு காரணியாகதான் இருக்கிறார்கள். இன்னும் பல சிதைவுகள் நம் பண்பாட்டை அழித்துவருகின்றன. திட்டமிட்டே செயல்படுத்துவார்களோ?? எனும் எண்ணம் எழுகிறது. எளிமையாக கூறினால் ......

      இந்திமொழி நாடகங்கள் (serial ) தமிழ் மொழியில் மொழிமாற்றம் செய்து நம்மை மாற்றிவருகிறது. மதுபாலா எனும் நாடகத்தை பார்த்து தமிழ்நாட்டு ஜவுளிக்கடைகளில் மதுபாலா சுடிதார் ஏகபோகமாக விற்கப்பட்டது. அதன்பின் மதுபாலா சுடிதார் விளம்பரதுறையிலும் பின் திறைத்துறையிலும் நுழைந்தது. பெரியவர்கள் தொடங்கி 4 வயது சிறுகுழந்தைகள் உட்பட மதுபாலா சுடிதார் பிரபலமாக்கப்பட்டது. ஏன்.... திருமணமான புது பெண்கள் இப்போது வரவேற்புக்கு ( Reception ) மதுபாலா சுடிதாரைத்தை உடுத்துகிறார்கள். ஒரு நாடகத்தால் மட்டும் இந்த தாக்கமென்றால் இன்னும் பல நாடகங்கள், நிகழ்ச்சிகள் நம் தொலைக்காட்சியிலே நடைபெறுகிறது.

       இந்த செய்தியை எப்படி நிறைவுக்கு கொண்டு வர வேண்டுமென தெரியவில்லை ஏனெனில் இதன் நீட்ச்சி ஒவ்வொன்றாக வளர்ந்துகொண்டே செல்கிறது. நாம்தான் விளிப்போடு இருந்து எதனை வாங்குவது ,எதனை வாங்ககூடாது மற்றும் எதனை ஆதரிப்பது எதனை ஆதரிக்ககூடாது என்று சிந்தித்து செயல்படவேண்டும். நல்லதை பயன்படுத்த வேண்டும் அந்த நல்லதையே நம் பிள்ளைகளுக்கும் விட்டுசெல்லவேண்டும்...

No comments:

Post a Comment