Thursday, 18 February 2016

"தமிழக தேர்தல்- 2016"

                             பாளையங்கோட்டை  தூய சவேரியார்  இல்லத்தில் மணவர்களுக்கு ஆளுமை திறனை வளர்க்கும் பொருட்டு இல்ல மாணவர்களுக்காக மாதத்தில் ஒரு முறை ''தலைவனாக'' எனும் சிறப்பு சொற்பொழிவு நடை பெற்று வருவது வழக்கம் .இம்முறை  எதிர் கொண்டு வரும் சட்டமன்ற தேர்தலை மையப்படுத்தி   "தமிழக தேர்தல்- 2016" எனும் தலைப்பில் திரு.பிரிட்டோ அவர்கள் சொற்பொழிவு ஆற்றினார் . இவர் ஒரு வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது . 18.02.2016 அன்று மாலை 06:30 மணியளவில் சவேரியார் இல்லத்தில் உள்ள  தெரேசா அரங்கத்தில் இல்ல  இயக்குனர் அருட்தந்தை சகாயராஜ் சே .ச மற்றும் அருட்தந்தை வேதநாயகம் சே.ச மாணவ ஆலோசகர் அவர்களின் தலைமையில் நிகழ்சி நடைபெற்றது . இயக்குனர்  சகாயராஜ் சே.ச அவர்களின் வரவேற்புரையுடன் சொற்பொழிவு தொடங்கியது.
                           தமிழகத்தில்  தலைவர்களுக்கு பஞ்சமில்லை  ஆனால்  இவர்கள் மக்களுக்கான தலைவர்களா என்பது கேள்விகுறி என்ற துவக்கதுடன் மாணவர்களிடயே   சமுகத்தை பற்றிய உண்மைகளை எடுத்துவைத்தார். மேலும் தமிழகத்திலே நிகழும் பல்வேறு போராட்டங்கள் , தமிழகத்னை பற்றிய நீதிமன்ற தீர்ப்புகள் , இளைங்கர்களுக்கான வேலைவாய்ப்பு ,தமிழக இயற்கை வளம் , கல்வி ,  மருத்துவம் என்றும் அகில இந்திய கட்சிகள் மற்றும்  தமிழக கட்சிகள் பற்றியும் தன்னுடைய உரையில் இன்றைய சமுக நிகழ்வுகளை தொடுத்தார் . தேர்தலின் போது மட்டும் நம்மை தேடுவோரிடம் நாம் பல கேள்விகளை கேட்க வேண்டும் . இதுவரை என்ன செய்தீர்கள் ? இனிமேல் என்ன செய்ய போறீர்கள் ? என்ற மேலான கருத்தை மாணவர்களின்  மனதில் விதைத்துள்ளார் . மேலும் மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பதில் கூரினர் . இல்ல மாணவர்களின் தலைவர் சதிஷ் குமார் சிறப்பு விருந்தினருக்கு அன்பளிப்பு வழங்கினார்.தலைவனாக சிறப்பு சொற்பொழிவு இல்ல இயக்குனர் சகாயராஜ் சே.ச அவர்களின் நன்ரிஉரைஉடன் இனிதே நிறைவேறிற்று .

No comments:

Post a Comment