கங்கை நதி நீர் அனைத்து தபால்
நிலையங்களிலும் விற்பனை செய்வது – எனும் சட்டம் சற்று மோசமானதாகும்.
ஒரு நாட்டை ஆளுகின்ற
அரசு மக்களுக்கான ஒரு திட்டத்தை அறிவித்தால் அதில் பல்வேறு சிறப்புக்கள் இருக்க வேண்டும்.
ஆனால் மத்திய அரசின் இந்த திட்டத்தால் மக்களுக்கு பல்வேறு தீமைகள் தலைமுறை தலைமுறையாக
வரப்போகிறது என்பதை என்னால் பொறுத்து கொள்ள முடியாததாக இருக்கிறது.
மதங்களை எதிர்த்தோ,
சட்டத்தை எதிர்த்தோ,சடங்கு முறைகளை எதிர்த்தோ எனது கருத்துக்களை கூறவில்லை. ஒரு நல்
மனித நேயத்தோடு பதிவு செய்ய விரும்புகிறேன். ஏனெனில் கங்கை நதி பற்றியும் அதில் கலக்கும்
தொழிற்சாலை கழிவுகள் பற்றியும் அரசாங்கமே அதிகாரப்பூர்வமாக பல பதிவுகளை வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் அரசாங்கமே இப்படி ஒரு இழிவான சட்டம் கொண்டு வந்தால் இதில் என்ன நியாயம்
இருக்கிறது?
கங்கை நதி நீரில்
ஒரு தடவை மூழ்கி எழுந்தால் புற்றுநோய் தாக்க கூடும்.
2007ம் ஆண்டே கங்கை
உலகின் 5 மிகவும் மாசுப்பட்ட நதிகளில் ஒன்றாகவும் மலையளவு நுண்கிருமிகளை உள்ளடக்கியதாகவும்
இந்திய அரசு அறிக்கை கூறியள்ளது.
கான்பூரில் உள்ள
100க்கும் மேற்பட்ட தொழிற்சாலையில் இருந்து வரும் கழிவுகள் ஒரு நாளைக்கு சராசரியாக
5 இலட்சம் கிலோ கலக்கிறது.
அஸ்தி, அழுகிய பிணம்
எல்லாம் கலக்கும் இடம் புனித நதியான கங்கையிலே.
கங்கை நதியோரம் உள்ள
24 மாவட்டங்களில் வசிக்கும் பெண்களுக்கு பித்தப்பை நோய் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
இவை போன்ற பல பாதிப்புகள்
கங்கை நதி நீரால் வரக்கூடியது. இவைப் பற்றி இணையத்தில் படிக்கும் போது என் மனதில் பல
கேள்விகள் எழுந்தது.
கங்கை நதியை சுத்தம்
செய்ய 6500 கோடி செலவிடும் சூழலில், பாதிக்கப்பட்ட நீரை மக்களுக்கு கொடுக்க சட்டம்
போடப்பட்டது எதனால்?
ஒருவர் தன் வாழ்நாளில்
கங்கை நீரில் நீராடியிருக்க வேண்டும் என்ற சில சடங்கு முறைகளை பின்பற்றும் மக்களை அழிக்க
இந்த சட்டம் உருவாக்கபட்டதோ?
அப்படியே கங்கை நதி
சுத்தமானது என்றால், அதனை பற்றிய ஆய்வறிக்கையை அதனை சுற்றியுள்ள தொழிற்சாலை கழிவுகள்
,பிணங்கள் எரிப்பது போன்றவற்றை மக்கள் முன்னிலையில் சமர்பிக்க கூடாதா?
இல்லையெனில் ஜல்லிக்கட்டுக்கு
தடைவிதித்ததன் பின்புலத்தில் இயங்கிய அமைப்புகளின் உள்நோக்கங்களை போல இந்த சட்டத்தின்
பின்னும் அரசியல், பிற அமைப்புகளின் உள்நோக்கம் இருக்குமோ?
- போன்ற பல கேள்விகள் என் மனதில்
அலைபாய்கிறது. இவை அனைத்திற்கும் எப்போது தீர்வு கிடைக்கும் என்றும் தெரியவில்லை. மக்கள்
எப்போது இதன் உண்மை நிலையை அறியப் போகிறார்கள் என்றும் தெரியவில்லை. சிந்திப்போம்….
செயல்படுவோம்…
No comments:
Post a Comment