Saturday, 23 July 2016

கபாலி திரைவிமர்சனம்

கதை கரு: மலேசிய தமிழ்ர்களுக்காக போரடும் தாதா…
டைரக்டர்: பா.ரஞ்சித்
இசை: சந்தோஸ் நாரயணன்
கேமரா: முரளி

           மலேசியாவுக்கு பிழைப்பு தேடி சென்று தோட்டங்களில் கூலியாக வேலை பார்க்கும் தமிழர்களுக்காக ரஜினிகாந்த் உதவியாக இருக்கிறார். நிர்வாகத்துடன் மோதி சம்பள உயர்வு பெற்று தருகிறார். மலேசிய தமிழர்கள் தலைவரான நாசருக்கு ரஜினிகாந்தின் குணம் பிடித்துப்போக தன்னுடன் சேர்த்துக்கொள்கின்றனர்.

              அங்குள்ள சீனர்களுடன் தமிழர்கள் சிலர் கூட்டு வைத்து போதைமருந்து கடத்துதல், பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்துதல் போன்ற சமுக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். அதை எதிர்க்கும் நாசரை கொலை செய்கின்றனர். இதனால் ரஜினிகாந்த் தமிழர்கள் தலைவராகிறார். நாசர் பொருப்புக்கு ரஜினிகாந்த் வந்ததை பொறுக்காத கடத்தல் கும்பல் அவரையும் தீர்த்துகட்ட வருகிறது. இந்த மோதலில் ரவுடி கூட்டத்தை ரஜினிகாந்த் கொன்று அழிக்கிறார். அப்போது கர்ப்பமாக இருக்கும் அவரது மனைவியை ரவுடிகள் சுடுகின்றனர். இதில் அவர் இறத்துபோனதாக ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்கின்றனர். ரஜினிகாந்தை ஜெயிலில் அடைக்கின்றனர்.

             25 வருட சிறை வாழ்க்கைக்கு பிறகு விடுதலையாகி வெளியே வரும் ரஜினி போதைகடத்தல் கும்பல் இளைஞர்கள், மாணவர்கள் வாழ்க்கையை சீரழிப்பதை கண்டு சீறுகிறார். அவரது மனைவியும் குழந்தையும் உயிருடன் இருப்பது அவருக்கு தெரிகிறது. போதை கும்பலை ஒழிப்பதும், குடும்பத்தோடு சேருவதும் மீதிக்கதை.

          1).தமிழர்களை பற்றிய சில வசனங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
          2).படத்தின் ஆரம்ப காட்சிகள் மெதுவாக நகர்கின்றன. மனைவியை தேடியலையும் காட்சிகளின் நீளத்தை குறைத்திருக்கலாம்.
          3).ரஜினியின் வித்தியாசமான நடிப்பு பற்றி பேசப்பட்டு வந்தாலும், கதை உருவமைப்பில் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம்.
          4).துப்பாக்கியை கையாளும் விதம் சில நேரங்களில் நகைச்சுவையாக உள்ளது.
சென்னையில் எடுக்கப்பட்ட பகுதி , ரஜினியின் கதாபாத்திரத்தையே உடைத்துவிட்டது. படத்தை மேலும் தொடர ஒரு நெருடலாகவே இருந்தது.
        5).ஒரு சில நிகழ்வுகளை தவிர, கதை கரு எடுத்துக்காட்டிலே முடிந்துவிட்டது போல இருந்தது. தன் குடும்பத்தை தேடி கண்டுபிடிப்பதாகவே அமைந்துள்ளது, கபாலி. ஆக மலேசிய தமிழ் மக்களுக்காக போராடி சிறைசென்ற தாதா விடுதலையாகி குடும்பத்தை தேடுகிறார்… என்பதே கதை கரு.

             6).தமிழ் மக்களை காப்பாற்றும் போராட்ட நிகழ்வு அதிகம் வைத்து குடும்ப தேடலை குறைத்திருந்தால் கபாலி வெற்றி பெற்றிருக்கலாம்.

             7).என்னை கேட்டால் கபாலி வெற்றி பெறவில்லை என்றே கூறுவேன். எல்லாம் விளம்பரயுக்தி… மாயை…

              8).கதை கருவே நன்றாக அமையவில்லை. இதற்கு போய் இப்படி ஒரு விளம்பரமா???

              9).நேரத்தையும், பணத்தையும் வீணடிக்க வேண்டாம்னு நினைக்கிறேன்.

No comments:

Post a Comment