ST.XAVIER’S
COLLEGE
THE
DEPARTMENT OF VISUAL COMMUNICATION
ASSOCIATION DAY
தூய சவேரியார் கல்லூரியில் 7ம்
ஆண்டில் அடியெடுத்து வைக்கும் காட்சி தொடர்பியல் துறையின் தொடக்க விழா 13.07.2016 அன்று
கொண்டாடப்பட்டது. வண்ணமயமாக அருட்தந்தை.மிரண்டா கலையரங்கம் காட்சி தொடர்பியல் மாணவ
மாணவிகளால் ஜொலித்தது. விழாவினை முனைவர்.பால சுப்பிரமணிய ராஜா தலைமை வகித்தார். இவர்
மனோன்மனியம் சுந்தரனார் பல்கலை கழகத்தில் தொடர்பியல் துறையில் பேராசிரியராக பணியாற்றி
வருகிறார். கல்லூரி முதல்வர் அருட்தந்தை பிரிட்டோ வின்செண்ட் சே.ச , செயலர் அருட்தந்தை
அந்தோணி சாமி, துறைத் தலைவர் அருட்தந்தை இன்பெண்ட் கிங்ஸ்லி சே.ச மற்றும் பேராசிரியர்கள்
விழாவினை சிறப்பு பெற வழிவகுத்தனர்.
விழாவானது துறைத்
தலைவர் அருட்தந்தை இன்பெண்ட் கிங்ஸ்லி சே.ச வின் வரவேற்புரையுடன் இனிதே ஆரம்பமானது.
அதனை தொடர்ந்து செயலர் தந்தை அந்தோணி சாமி சே.ச அவர்கள் மாணவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும்
வகையில் தலைவர் உரை ஆற்றினார். மாணவர்களின் குறும்பட தொகுப்பினை அடங்கிய குறுந்தகடினை
விழாத்தலைவர் முனைவர் பால சுப்பிரமணிய் ராஜா வெளியிட செயலர் தந்தை பெற்றுக்கொண்டார்.
இரண்டாம் ஆண்டு மாணவ மாணவிகளின் ஆவணப்படம் மற்றும் புகைப்படங்களை முனைவர் பால சுப்பிரமணிய
ராஜா வெளியிட கல்லூரி முதல்வர் பெற்றுக்கொண்டார். முதல்வர் அவர்களின் ஆசியுரை மாணாக்கர்களிடையே
நல் எழுச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. விழாத்தலைவர்களை கெளரவிக்கும் விதமாக
நினைவுப் பரிசு வழங்கப்பட்டு மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சிக்கு வழிவிடப்பட்டது.
மூன்றாம் ஆண்டு
மாணாக்கர்களின் குறும்பட தொகுப்பு திரையுடப்பட்டது. இரண்டாம் ஆண்டு மாணக்கர்களின் ஆவணப்படம்
மற்றும் புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பு திரையிடப்பட்டது. மூன்றாம் ஆண்டு மாணவரின்
கவிதை நயத்தை வெளிப்படுத்தும் விதமாக கவிதை அரங்கேறியது. துறை மாணவ மாணவியர்களின் சிறந்த
புகைப்படங்கள் மற்றும் ஓவியங்கள் உள்ளடக்கிய தொகுப்பு திரையுடப்பட்டது. பலகுரல் மன்னர்களின்
நகைச்சுவை விகட விருந்து அளிக்கப்பட்டது. மேலைநாட்டு கலைநயத்தில் துறை மாணவர்களால்
நடனம் அரங்கேறியது. தொடர்ந்து துறை மாணவர்களால் சமூக அவலங்களை மையமாக கொண்டு “ பொய்
சொன்ன கடிச்சி கொதறிடுவேன்” என்ற நாடகம் அரங்கேறியது. மாணவிகள் ராஜஸ்தான் கலைநயத்தை
தங்களின் நடனத்தின் மூலம் வெளிக்காட்டினர்.
விழாத்தலைவர்
முனைவர் பால சுப்பிரமணிய ராஜா அவர்களின் தலைமையுரை மாணவ மாணவிகளிடையே படைப்பாற்றலை
பற்றிய கருத்துகளை ஏற்படுத்தியது. மேலும் விழாத்தலைவரின் ஊக்கமூட்டும் வார்த்தைகள்
மாணவ மாணவிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
துறை மாணவ மாணவியர்களின்
இன்னிசை பாடல் கச்சேரி இனிப்பு விருந்தாக அமைந்தது. இரண்டாம் ஆண்டு மாணவரின் நன்றியுரை
விழாவின் இறுதிக்கு அழைத்து வந்தது. விழாவினை மூன்றாம் ஆண்டு மாணவ மாணவியர்கள் படைப்பாற்றல்
திறமையோடு தொகுத்து வழங்கியது சிறப்பாக இருந்தது. விழாவானது தேநீர் விருந்துடன் இனிதே
நிறைவேறி இக்கல்வியாண்டில் பல திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பாக அமைந்துள்ளது.
No comments:
Post a Comment