Tuesday, 16 February 2016

எம் துறையில் Mass communication therioes கருத்தரங்கு

                     தூய சவேரியார் கல்லூரியில் காட்சி தொடர்பியல் துறையில் MASS COMMUNICATION THEORIES எனும் தலைப்பில் கருத்தரங்கு நேற்று ( 15.02.2016 ) மதியம் நடைபெற்றது. காட்சிதொடர்பியல்  துறையின் ஒருங்கினைப்பாளர் பேரா.ஆன்டோ கிங்ஸ்லி அவர்களும் துணை பேரா.சந்தோஷ் அவர்களும் தலைமைவகித்தனர். கருத்தரங்கினை துணை பேரா.சதிஷ் அவர்கள் வழங்கினார். இவர் ஈரோடு மாவட்டம், பெருந்துரையிலுள்ள மஹாராஜ கலை கல்லூரியில் காட்சி தொடர்பியல் துறையில் துணை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். மாணவி கெரன் சொருபா வரவேற்புரை ஆற்றினார். MASS COMMUNICATION THEORIES-ன் பல்வேறு வகைகள் மற்றும் வேறுபாடுகள் எடுத்துக்காட்டுடன் வழங்கப்பட்டது மேலும் தற்போதைய ஊடகம் பற்றிய விளக்கவுரையும் ஊடக நெறிமுறைகளுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது. சுமார் 3 மணி நேரத்திற்கும் கூடுதலாக நடைபெற்ற இந்த கருத்தரங்கினை துணை பேரா.சந்தோஷ் அவர்கள் கல்லூரியின் சார்பாகவும் காட்சிதொடர்பியல் துறையின் சார்பாகவும் நன்றியுரை ஆற்றி இனிதே நிறைவேற்றினார்.

No comments:

Post a Comment