கரு : தன்னைக் பலாத்கரம் செய்து கொன்றவர்களை பழி தீர்க்கும் எட்டு வயது சிறுமி மற்றும் அச்சிறுமியின் நாய் தான் கரு.

தன்னை பலாத்கரம் செய்து அடித்துக் கொன்றவர்களை நயன் தாரா மூலமாகவும் , தான் வளர்த்து வந்த அந்த நாயின் மூலமாகவும், அந்தக் பழைய காலத்து காரை பயன்படுத்தி எப்படி அந்த சிறுமியின் ஆவியும் நாயும் விரட்டி , விரட்டி பழி தீர்க்கிறது என்பதுதான் " டோரா " படத்தின் கதை மொத்தமும்.
ஒரு வழக்கமான பழிவாங்கல் பேய்க் கதையில் பேய்க்கு ஒரு வித்தியசமான வடிவத்தைக் கொடுத்திருப்பதன் மூலம் வேறுபடுத்திக்காட்டியிருக்கிறார்கள். இரண்டாம் பாதியில் பேயின் பின்கதையும் பழிவாங்கலுக்காக சொல்லப்படும் காரணமும் வழக்கமானதுதான். ஃப்ளாஷ்பேக் முடிந்தபின் சூடுபிடிக்கும் படம் சுவாரஸ்யமாகவே நகர்கிறது.
கதையில் லாஜிக் சறுக்கல்கள் பல இடங்களில் உறுத்துகின்றன. நயன்தாரா கார் விற்பனைக் கடையின் சிசிடிவி கேமரா பதிவுகளை மிக எளிதாகப் பெறுவது, ஓடும் காரிலிருந்து கீழே விழுந்து உருண்டுகொண்டே தப்பிப்பதெலாம் லாஜிக் சரறுக்கல்கள்தான். தம்பி ராமையா காமடியில் கடுப்பேற்றினாலும் ஒரு சில எமோசனல் காட்சிகளில் வழக்கம்போல் தனது முத்திரையை பதிக்கிறார் . ஹரீஷ் உத்தமன் மிடுக்கான போலீஸ் அதிகாரியைக் கண் முன் நிறுத்துகிறார்.
மொத்தத்தில், நயன்தாராவின் நடிப்புக்காகவும் சில மாஸ் காட்சிகளுக்காகவும் ஓரளவு விறுவிறுப்பான இரண்டாம் பாதிக்காகவும் ‘டோரா’ படத்தை ஒரு முறை பார்க்கலாம் .
No comments:
Post a Comment