உங்க இஸ்டத்துக்கு மாத்துரீங்க… கேக்க ஆள் இல்லைன்னு நினைசீங்கலா… இரண்டு நாளா பாத்துகிட்டு இருக்கேன்… அப்புடி என்ன வந்துச்சி் உங்களுக்கு… -என்று 48வயது மதிக்கதக்க பெண்மணி ஒருவர் தனியார் பேருந்து ஒட்னரிடம் நடுவீதியீல் சண்டை போட்டு கொண்டு இருந்தார்.
அட அந்த தனியார் கம்பெனி பேருந்தோட போதும் போதும்னு ஆகுது. எல்லா வாகனங்களுக்கும் சாலையில் குறிப்பிட்ட வேகம் உண்டு. ஆனால் இந்த தனியார் பேருந்து ஒட்டுனர்களுக்கு மட்டும் “முன்னால போர பஸ்ச எப்புடியாவது முந்திரனும்’’னு பிச்சி பிடிங்கிகிட்டு நிக்கிறாங்க. குறுக்க யார் வந்தாலும் கவலையில்லை. ஆஸ்பத்திரி பகுதியோ, பள்ளி பகுதியோ, என்ற அக்கறை இல்லை பேருந்தினுள் பல உயிர்கள் இருக்கிறார்கள் என்ற எண்ணமில்லை. என்னம்மோ, அவங்க வீட்டு சொத்த களவாடிட்டு போகுறவன பிடிக்க போகிறமாதிரி வண்டி ஓட்டுகிறார்கள்.
பல நாள்கள் கவனித்தது உண்டு.சீக்கிரமா போகுறதுக்காகவேண்டி சரியான நிறுத்ததுல பயணிகள இறக்கிவிடாம முன்னாடி நிக்குற பேருந்த முந்திகிட்து வண்டிய குறுக்க விடுவாங்க… இவரும் வண்டிய எடுக்கமாட்டார், பின்னால இருக்கிறவங்களையும் வண்டிய எடுக்கவிடமாட்டார்… பயணிகளையும் சரியான இடத்துல இறக்கிவிடமாட்டார்… வண்டில எல்லா சீட்டுலயும் ஆள் இறுப்பாங்க… ஆனாலும் வண்டிய எடுக்கமாட்டங்க… வண்டி ஆக்சிலரேட்டர அலுத்திவிட்டுகிட்டே இருப்பாங்க… ஹாரன அடிச்சிகிட்டே இருப்பாங்க… வண்டில இருந்து அப்புடி ஒரு புகை வரும்… சுற்றுசூழலையும் கெடுத்துடுவாங்க… பஸ்சுக்குள்ள இருக்கிறவங்க மன ரீதியாக பாதிப்படையவும் செய்வாங்க…
இதுமட்டுமல்ல வழியில யாரு எங்க கையகாட்டி வண்டிய நிறுத்துங்கன்னு சொன்னாலும் உடனே வண்டிய நிறுத்தி ஆள் ஏத்துவாங்க… தனியார் பேருந்துகளை எல்லா இடத்துலயும் நிக்ககுடாதுன்னும் அப்புடியே நிப்பாட்டினா 2500 ரூபாய் அபராதம்னு சட்டம் போட்டதா ஒட்டுனர் சொன்னார்.ஒரு மாதம் இந்த சட்டம் அமர்களமாக போயிட்டு இருந்தது. “பழைய குருடி கதவதிறடினு சொல்லுற மாதிரி மறுபடியும் அவங்க ஆரம்பிச்சிட்டாக்க…
அதே வழிதடத்துல போகிற அரசு பஸ் ஓட்டுனரிடன் மனநிலை அப்படியே இதற்கு எதிர்பதம். அவங்க ரொம்ப எளிமையாக நடந்துகொள்வாங்க. சரியா பயணிகளை இறக்கிவிடுவாங்க. வண்டிய அதிவேகமா ஓட்டமாட்டங்க… தனியார் வண்டி வேகமா வந்தா உடனே வழிவிட்டுவிடுவாங்க..
அப்புறம் ஏன் எல்லாரும் தனியார் பேருந்துல ஏறுகிறாங்கன்னு, எனக்கு ஒரு குழப்பம். சில பேரிடம் கேட்டேன். அவங்க எல்லாரும் சொல்லுறது ஒரே மாதிரிதான் இருந்தது. விலை கொஞ்சம் குறைவு, சில்லரை பிரச்சனை அதிகம் வருவது இல்லை, நல்லா புதுபட பாட்டு போடுவாங்க…
இப்படி ஒரு சில காரணங்களால் மக்கள் இன்னும் தனியார் பேருந்தை விரும்புகிறார்கள். ஆனால் தனியார் பேருந்தினால் பயணிகள் மனரீதியான பாதிப்புகள், அதிவேகத்தால் ஏற்படும் பயம், தடினமான ஒலி எழுப்பியால் மன அழுத்தம், போட்டி மனப்பான்மை உருவாகுதல் என இன்னும் பல தீமைகள் இருப்பதை பயணிகள் அறிந்துகொள்ள வில்லை. அம்மாடியோ இதைப் பற்றி ஒரு ஆய்வை எடுத்து எனது மேற்கல்வியை முடித்துவிடலாம் போலிருக்கிறது.
என்னுடன் பயணித்த பயணி ஒருவர் கூறியது: தனியார் பேருந்து உரிமையாளர்கள் நிர்ணயிக்கும் பயணிகளைவிட அதிக பயணிகளை ஏற்றி உரிமையாளருக்கு லாபம் கொடுத்தால், ஓட்டுநருக்கும் நடத்துனருக்கும் குறிப்பிட்ட தொகை அதிகமாக கொடுக்கிறார்களாம்.
அந்த 48வயது பெண்மனி பார்ப்பதற்கு சாந்த குணமுடையவராக இருந்தார். ஆனால் இந்த செயலால் அவர் கோபமாக நடுதெரு என்று பாராது, இரவு 8:30 மணி என்று பாராது, சாலைகள் கூடும் இடம் என்று பாராது அந்த ஓட்டுநரை திட்டினார். தனது உரிமைக்காக போராடினார். அந்த பெண்மணி வந்த பேருந்தில் கூட்டம் குறைவு என்று திடீரென்று எல்லாரையும் வேறு பேருந்திற்கு அனுப்பிவிட்டு அந்த பேருந்து திரும்பிவிட்டது. அவ்வளவு நேரம்வரை யார் முதலில் செல்வது என்று போட்டிபோட்டுகிட்டு இருந்த அவர்கள் திடீரென இப்படியொரு செயல் செய்துவிட்டனர். அந்த பெண்மணி மட்டும் திட்டிக்கொண்டு வந்தார். இப்புடி பாதியில இறக்கிவிடுறதுக்கு மொதல்லயே ஒரு பஸ்ச எடுதிறுக்கலாம்னு ஆர்ம்பித்தது…தொடர்ந்து அடுத்த பேருந்தில் ஏறி அருகில் இருந்தவர்களிடம் இதைப் பற்றி பேசி ஓட்டுனர்களை திட்ட தொடங்கினார். ஆனா கூடவந்து, வேறு பேருந்தில் ஏறியவர்கள் அமைதியாகவே இருந்தார்கள். சாலையில் நின்றவர்கள் எல்லாரும் பாத்துகிடேதான் இருந்தார்கள். அவ்வளவு பெரிய முக்கியமான இடத்துல ஒரு போக்குவரத்து காவல் அதிகாரியும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்படியே இருந்திருந்தாலும் அவர்கள் என்ன செய்திருப்பார்கள் என்று நினைக்கிறீங்க…
இதுபோல் இன்னும் பல தனியார் பேருந்துகள் நடுதெருவில் கூத்து நடத்திகொண்டுதான் உள்ளது. போக்குவரத்துக்காக எவ்வளவோ தொகை பட்ஜெட்டில் ஒதுக்குகிறார்கள்… எவ்வளவோ அதிகாரிகள் பணிசெய்கிறார்கள்… எவ்வளவோ சட்டங்கள் இருக்கின்றன… இவை எல்லாம் இருந்து என்ன பயனென்று தெரியவில்லை? உங்களுக்கு தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன்…