திரைப்படதுறையின் ஆற்றல் மிகவும் பெரியது. மக்களிடம் மிக எளிதாக அனுகும் ஊடகமும் இது தான்.இத்துறை தன்னக்கத்தே கொண்ட சக்தியினால் மக்களிடம் பல மாற்றங்களை கொண்டு வரக்கூடியது. தற்போது திரைக்கு வந்திருக்கும் மற்றும் ஏற்கனவே வந்த படங்கள் மக்களிடம் சில வகைகளில் விளிப்புணர்வு ஏற்படுத்தக்கூடியதாக இருப்பினும் மது,சிகரெட் போன்ற முக்கியமான விளிப்புணர்வை முழுவதும் தெரிவிக்காமல் இருப்பது ஏமாற்றம் தரக்கூடியதே.
"மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு
புகைபிடித்தல் உடலுக்கு தீங்கானது"னு சொல்லிட்டு படத்தில் அதே காட்சிகளை வைப்பது எந்தவிதத்தில் நியாயம்...
சொல்லனும்னா இன்னும் நிறைய சொல்லலாம் பெரியவங்க அடிக்கடி ஒரு பழமொழி சொல்லுவாங்க ***முன்னேறு ஒழுங்கா இருந்தால்தான் பின்னால வருகிறதும் நல்லா இருக்கும் ***.திறன் கொண்ட திரைப்பட துறையினர் இன்னும் ஏன் இந்த மாற்றங்களை ஏற்படுத்தாமல் இருக்கின்றன.
தமிழகத்தில் மதுஒழிப்பு வேண்டுமானால் திரைப்படங்களில் மது காட்சிகள் வரக்கூடாதுதானே!!!சிகரெட் காட்சிகளும் கூடாதுதானே!!!அதிக இளைஞர்களை கவரக்கூடிய சக்திபடைத்த திரைப்படங்களுக்கு விதிமுறைகள் இல்லையா? அல்லது இருந்தும் கண்டுகொள்ளா நிலையா?
இதுமட்டுமல்ல இப்ப நடிகைகளின் மூலம் சிகரெட் குடிப்பது, பீர் அடிப்பது என்று புது கலாச்சாரம் உருவாக்கப்படுகிறது. நடிகர்களை பார்த்து தம் அடித்த இளைஞர்களை போல இனி கதாநாயகிகள் போல பீர் அடிக்கும் இளம்பெண்கள் உருவாகுவது நிச்சயமே...
(கேட்டால் சமுகத்தில் நடப்பதைதான் நாங்கள் காட்டுகிறோம் என்பார்கள்) படைப்பாற்றலை கேமரா, எடிட்டிங் என்று நிறுத்திக்கொள்ளாமல் கதைகளிலும் காட்டினால் திரையுலகம் மட்டுமல்ல வருங்கால அப்துல்கலாம்களுக்கும் பயனுள்ளதாக அமையும்.
தமிழகத்தில் மது விலக்கு வேண்டுமானால் திரைபடத்துறையிலும் மதுவிலக்கு வேண்டும் சிகரெட் காட்சிகளும் ஒதுக்கப்பட வேண்டும்...
No comments:
Post a Comment