Friday, 11 December 2015

இந்திய வள குளிர்பானங்கள் 2015

40% ஜீ.எஸ்.டி வரியை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். 250 கோடி அமெரிக்கடாலர் முதலீடு செய்து ஆயிரம் கோடிக்கணக்கில் தினமும் பணம் ஈட்டுகின்ற குளிர்பானக்கம்பெனிகள் பல வகைகளில் ஒவ்வொரு தமிழனையும் ஏமாற்றிவருகிறது.30 லட்சம் சில்லறை வணிகர்கள், ஆயிரக்கணக்கில் விநியோகஸ்தர்கள் பாதிப்படைவார்கள் என்று திசைதிருப்புகிறார்கள். இந்தியவளம் சுரண்டல், உடல்நலம் சீர்குளைத்தல், இந்திய குளிர்பானங்களின் முடக்கம்,சுற்றுசூழல் மாசுபாடு என்று பல சமூகபிரச்சனைகளை ஏற்படுத்துகிற குளிர்பானங்கள் இல்லாமல் இந்தியர்களால்  வாழமுடியும். அனைத்து ஊடகமும் சென்னை வெள்ளத்தை நோக்கிதிரும்பியிருக்கும் இச்சூழலில் இந்த செய்தி வெளிவருவது திட்டமிட்ட செயலாக இருக்கவும் வாய்ப்புள்ளது. சில அதிகாரிகள் தங்களின்  அதிகப்படியான  கடமை உணர்ச்சியை வெளிப்படுத்தும்முன், இந்த வரியை அரசு நிச்சயம் நடைமுறைபடுத்தவேண்டும். நாமமட்டும்  வாழ்ந்தால் போதாது நம்ம பிள்ளைகளும் வாழனும் ....

Thursday, 26 November 2015

திடீர் மனிதர்

            சில அறிகுறிகள் நம் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு முன்னோடியாக அமையும். சில நேரங்களில் அந்த அறிகுறிகளை நாம் அறிகிறோம்;பல நேரங்களில் அவற்றை பற்றி நாம் அறிய முற்படுவதில்லை. உதாரணமாக கனவுகளின் மூலம் நம் வாழ்கையை பற்றிய முன்னோட்டங்கள் வெளிப்படும்.சில நேரங்களில் மனிதர்களின் மூலம் வெளிப்படும். யாரோ ஒருவர் நம் வாழ்கையில் திடீரென வருவார். அவரை பற்றி நாம் யோசித்திருக்கமாட்டோம்.
இந்தமனிதர் ஏன் என் வாழ்க்கையில் வருகிறார்?
எதற்காக இவரை நான் அடிக்கடி சந்திக்கிறேன்?    இவர் யார்? என்று
             அந்த புதிய மனிதரை பற்றி நாம் அறிந்துகொள்வதில்லை. அதனாலோ என்னவாே ,அவரும் நம் வாழ்க்கையின் திசைக்காட்டி என்பதை மறந்துவிடுகிறோம். திசைக்காட்டி ஒருவரை நேர்வழியிலும் நடத்தும்;அதே சமயம் எதிர் வழியிலும் நடத்தும்.இந்த கலி காலத்தில் நேர் வழியில் நடத்தி செல்லும் திசைக்காட்டிகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். திடீரென வரும் ஒருவர், நம் வாழ்க்கை பாதையை திசைதிருப்பக்கூடியவராக இருப்பார்.   
             பொதுவாக எல்லோருக்கும் ஓர் எண்ணம் உண்டு. புதிய மனிதர்களிடம் பேசும் போது தன்னை பற்றிய விபரங்களை பெறுமையுடன் கூறிவிடுகிறார். அதன்பின் பரவாயில்லையே என்னுடைய நட்பு வட்டம் பெரிதாகியுள்ளதே!! என்று நினைத்துக்கொள்வார்கள். பிறரிடம் தன்னை பற்றி பகிர்ந்து கொண்டு நட்பை பெரிதாக்குவது தவறல்ல. ஆனால் அதுஅப்படி அமைவதில்லை, அந்த திடீர் மனிதர் ஏதோ ஒரு வழியில் அடிக்கடி நம் பாதையில் குறுக்கிடுவார். நமக்கே தெரியாமல் அவரிடமிருந்து சில கொள்கைகளை, கருத்துகளை, அனுகுமுறைகளை பின்பற்றுவோம்.அது நம்முடைய இயல்பு வாழ்க்கையை அப்படியே திசைதிருப்பிவிடும். தவறான அனுகுமுறைகளால், நம் இலக்கில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை சந்திக்க நேரிடும். அதனைப் பற்றி நாம் அறிந்திருக்க மாட்டோம்.  
             இலக்கு இதுதானே; என்னால் எளிமையாக சாதிக்க இயலும்; "நான் சாதிக்க பிறந்தவன்" என்று மாறுதட்டிக் கொண்டிருப்போம். ஆனால் உண்மையில் நம் இலக்கு அங்கே இடிந்துக்கொண்டிருக்கும்.இந்த வெளிப்பாடு திடீரென குறுக்கிட்ட ஒருவராலே. இப்படி தினமும் நம் வாழ்க்கையில் பலர் குறுக்கிடும் போது, நம் இலக்கு என்னவாகும்? பலரிடமிருந்து நாம் பல கொள்கைகளை அனுகுமுறைகளை உள்வாங்குகிறோம். ஒருவராலே நம் இலக்கு சிறிது சிதைந்துவிட்டதெனில் பலரால் நம் இலக்கு நிச்சயம் உடைந்துவிடும் அல்லது தவறான இலக்காக உருமாற்றம் பெறும்.
          "கூடாநட்பு கேடாய் விளையும்"-என்பது அறிஞர்களின் அமுதவாக்கு. இன்னும் ஆழமாக கூறினால் நாம் தினமும் சந்திக்கின்ற மனிதர்களிடமிருந்து எண்ணங்களை(vibration) உள்வாங்குகிறோம்.  நம்மை அறியாமல் நடக்கும் இந்த செயல்கள், நாம் குறித்திருக்கும் இலக்கை சிதைத்துவிடுகிறது. சிதைந்த இலக்கை மீண்டும் சரி செய்வது எளிதான காரியமில்லை. ஆனால் முன்னதாகவே இந்த திடீர் மனிதர்களை பற்றிய தெளிவான புரிதலை கொண்டிருந்தால்  அவர்களை நம் வாழ்கையிலிருந்து களைய முடியும்: களைய வேண்டும்.நல்லது மட்டும் கற்றுக்கொள்வது கடினமானது என்றாலும், இதுதான் என்னுடைய இலக்கு, இதனை நிச்சயம் அடைவேன் என்ற உறுதிபாட்டிற்கு முன் அவை எளிமையே. ஆக எச்சரிக்கையாக இருப்போம்; திடீர் மனிதர்களால் நம் இலக்கு திசைதிரும்புவதை தடுப்போம்.

         திடீர் மனிதர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் சொல்லப்போனால்

      #  பேருந்தில் உடன் பயணிப்பவர்கள்
      #  சந்தையில் சந்திப்பவர்கள்
      #  பள்ளியில் உடன் பணிபுரிபவர்கள்
      #  கல்லூரியல் உடன் பணிபுரிபவர்கள்
      #  உடன் படிப்பவர்கள்
      #  கோயிலில் சந்திப்பவர்கள்
      #  கடைகளில் சந்திப்பவர்கள்
      #  அலுவலகத்தில்  உடன் பணிபுரிபவர்கள்
      #  சக மாணவர்கள்
      #  செய்திதாள் கொடுப்பவர்

                -என்று இன்னும் இப்பட்டியல் தொடர்ந்து கொண்டே செல்லக் கூடியது. நம் வாழ்க்கைக்கு தேவையானவர்களை மட்டும் நம் இதயத்தில் வைப்போம், மற்றவர்களை சாதாரணமாக மூளையில் வைப்போம். நம் பாதை என்றும் சரியாக அமையும். நம் இலக்கு என்றும் தெளிவாக அமையும். ஆம்... நம் இலக்கு நம் கைகளிலே இருக்கட்டும்.

Tuesday, 17 November 2015

திரைப்பட கதாப்பாத்திரங்களுக்கு மட்டும் விதிவிலக்கா

           திரைப்படதுறையின் ஆற்றல் மிகவும் பெரியது. மக்களிடம் மிக எளிதாக அனுகும் ஊடகமும் இது தான்.இத்துறை தன்னக்கத்தே கொண்ட சக்தியினால் மக்களிடம் பல மாற்றங்களை கொண்டு வரக்கூடியது. தற்போது திரைக்கு வந்திருக்கும் மற்றும் ஏற்கனவே வந்த படங்கள் மக்களிடம் சில வகைகளில் விளிப்புணர்வு ஏற்படுத்தக்கூடியதாக இருப்பினும் மது,சிகரெட் போன்ற முக்கியமான விளிப்புணர்வை முழுவதும் தெரிவிக்காமல் இருப்பது ஏமாற்றம் தரக்கூடியதே.

"மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு
புகைபிடித்தல் உடலுக்கு தீங்கானது"னு சொல்லிட்டு படத்தில் அதே காட்சிகளை வைப்பது எந்தவிதத்தில் நியாயம்...

            சொல்லனும்னா இன்னும் நிறைய சொல்லலாம் பெரியவங்க அடிக்கடி ஒரு பழமொழி சொல்லுவாங்க ***முன்னேறு ஒழுங்கா இருந்தால்தான் பின்னால வருகிறதும் நல்லா இருக்கும் ***.திறன் கொண்ட திரைப்பட துறையினர் இன்னும் ஏன் இந்த மாற்றங்களை ஏற்படுத்தாமல் இருக்கின்றன.
            
             தமிழகத்தில் மதுஒழிப்பு வேண்டுமானால் திரைப்படங்களில் மது காட்சிகள் வரக்கூடாதுதானே!!!சிகரெட் காட்சிகளும் கூடாதுதானே!!!அதிக இளைஞர்களை கவரக்கூடிய சக்திபடைத்த திரைப்படங்களுக்கு விதிமுறைகள் இல்லையா? அல்லது இருந்தும் கண்டுகொள்ளா நிலையா?
             இதுமட்டுமல்ல இப்ப நடிகைகளின் மூலம்  சிகரெட் குடிப்பது, பீர் அடிப்பது என்று புது கலாச்சாரம் உருவாக்கப்படுகிறது. நடிகர்களை பார்த்து தம் அடித்த இளைஞர்களை போல இனி கதாநாயகிகள் போல பீர் அடிக்கும் இளம்பெண்கள் உருவாகுவது நிச்சயமே...

             (கேட்டால் சமுகத்தில் நடப்பதைதான் நாங்கள் காட்டுகிறோம் என்பார்கள்) படைப்பாற்றலை கேமரா, எடிட்டிங் என்று நிறுத்திக்கொள்ளாமல் கதைகளிலும் காட்டினால் திரையுலகம் மட்டுமல்ல வருங்கால அப்துல்கலாம்களுக்கும் பயனுள்ளதாக அமையும்.
  
             தமிழகத்தில் மது விலக்கு வேண்டுமானால் திரைபடத்துறையிலும் மதுவிலக்கு வேண்டும் சிகரெட் காட்சிகளும் ஒதுக்கப்பட வேண்டும்...

Monday, 2 November 2015

கல்லறையில் கேட்டது

ம்ம்ம்...
இது எங்க அப்பா
இது எங்க அம்மா
அந்தா அது எங்க தாத்தா
எங்க அப்பாதான் ரொம்ப உடம்பு சரியில்லாம...
சரி...
ஏல உங்க தாத்தா பாட்டிக்கு பிடிச்ச பண்டங்களை எடுத்து கல்லறையில வைங்க...

Friday, 30 October 2015

தீபாவளி மனநிலை

குடும்ப தலைவர்:அய்யய்யோ அதுக்குள்ளயே தீபாவளி வந்திடிச்சா
குடும்ப தலைவி: தீபாவளி சீக்கிரம் வரமாட்டிக்கே
அண்ணன் :தீபாவளி ஆஃபா்ல புது பைக் வாங்கிரனும்
அக்கா :அவா வச்சிருக்கிற மாதிரியே ஒரு ஐபோன் வாங்கனும்
தம்பி :மேலாப்போய் வெடிக்கிற வெடி மட்டும்தான் போடுவேன்
தங்கை :லெக்கின்ஸ்கிறாங்களே அதை அடம்பிடிச்சாச்சும் வாங்கிறனும்
மாணவன் :அப்பாடா ஸ்குல் லீவு
மாணவி :வீட்டுல நிறைய வேலை செய்யனுமே
உடல் உழைப்பாளி :போனஸ் கிடைச்சா சமாளிக்கலாம்
மருத்துவர் :என் கைராசிய இன்னைக்கு பாரு
நர்ஸ் :எப்பதான் வீட்டுக்கு போவோமோ
போலீஸ் :லீவு கிடைக்காதா
புது தம்பதியர் :தலை தீபாவளியே
பெண் வீட்டார் :மாப்பிள்ள நிறைய எதிர்பார்பாரோ
பிச்சைக்காரன் :நல்ல சாப்பாடு கிடைக்கும்...
.............................,................................,.................................
இன்னும் நிறைய மனநிலை இருக்கிறது நம்முடைய தீபாவளி மனநிலை வாழ்வின் ஒளியை உள்வாங்குவதாய் அமையட்டும்
தீபாவளி நல்வாழ்த்துகள்

Monday, 1 December 2014

"HOW TO BUILD UP A HEALTHY  RELATIONSHIP WITH OTHERS"






  • If one of your friend is sick, you must take care of him or her. 
  • you should be concern towards them.
  • keep in touch...
  • make them feeling secured or motherly love