Monday, 15 February 2016

நெஞ்சம் பொறுப்பதில்லையே...

சுப்பிரமணிய பாரதியாரின் கவிதைகளை தொடர்ந்து...

       நெஞ்சம் பொறுப்பதில்லை
இந்த நிலை கெட்ட மானிடர்களை
           நினைக்கும் போது...

காதலை மட்டும் மையப்படுத்தும்
இயக்குனர்களை நினைக்கும் போது...

கவர்ச்சியை மட்டும் மையப்படுத்தும்
ஒளிர்பதிவாளர்களை நினைக்கும் போது...

பணத்தை மட்டும் மையப்படுத்தும்
தயாரிப்பாளர்களை நினைக்கும் போது...

புலன் உணர்வுகளை மட்டும் மையப்படுத்தும்
கதை ஆசிரியர்களை நினைக்கும் போது...

உடலை திரையிட்டு காட்டும்
கதாநாயகிகளை நினைக்கும் போது...

பிஸ்தாவாக தன்னை காட்டும்
கதாநாயர்களை நினைக்கும் போது...

Friday, 12 February 2016

எம் கல்லூரியில் தூய லூர்து அன்னை திருவிழா

                   பாளையங்கோட்டை , தூய சவேரியார் கல்லூரியில் (11.02.2016) மாலை 06:30 மணியளவில் தூய லூர்து அன்னை தேர்பவனி நடைபெற்றது. தேர்பவனியை தூய சவேரியார் கலைமனைகளின் அதிபர் தந்தை அருட்திரு.டேனிஸ் பொன்னையாS.J.துவக்கி வைத்தார். பூக்களால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட தேர்பவனியில் இயேசுசபை அருட்தந்தையர்கள்,அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள், கல்வியியல் கல்லூரி மாணவர்கள், சவேரியார் இல்ல மாணவர்கள், அன்னை தெரசா இல்ல மாணவிகள், திரு இருதய இல்ல மாணவர்கள், ஆசிரியப்பெருமக்கள், இறைமக்கள் என அனைவரும் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி கலந்து கொண்டனர். 

                  பவனியானது கல்லூரி வளாகத்தின் மையத்திலிருக்கும் லூர்து அன்னை கெபிக்கு வந்தடைந்தது. அங்கே அருட்தந்தை.பிரிட்டோ வின்சென்ட் அன்னை மரியாள் " இரக்கத்தின் முகம் ","தாயை போல பிள்ளை நூலை போல சேலை" என்று அருமையான மறையுறை ஆற்றி நற்கருனை ஆசிர்வாதம் வழங்கினாா் . அன்னை மரியாளின் பாதத்தில் அனைவரும் ஒரே குடும்பமாக ஜெபித்து இறையாசிர் பெற்றனர். இறுதியாக கல்வியியல் கல்லூரியின் முதல்வர் அருட்தந்தை.அமல்ராஜ் S.J அவர்கள் நன்றியுறை ஆற்றினார்.தூய லூர்து அன்னை தேர்பவனி இனிதே நிறைவேறிற்று.

Thursday, 11 February 2016

நம் மொழி

        இந்தி மொழி மற்றும் பிற மொழிகள் நம் சமுகத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன. வந்தாரை வரவேற்பதுதான் தமிழரின் பண்பாடு, வந்தாராக மாறுவது இல்லை. ஆனால் தற்போது வந்தாராக மாறுவதாகவே நாகரீகமாக மாறிவிட்டது. இதனால் இந்தி மற்றும் பிற மொழி பேசும் சமுகத்திலிருந்து வந்த மக்களால் நம் சமுகம் பல சிதைவுகளை கண்டுள்ளது என்று வெளிப்படையாகவே கூறலாம். நாம் விளிப்புணர்வுடன் இருக்கவேண்டிய சூழல் இது.

        நம் நாகரீக உடைக்கலாச்சாரம் , மொழிக்கலாச்சாரம் , உறவுக்கலாச்சாரம் பாதிப்படையும் நிலைக்கு அவர்களும் ஒரு காரணியாகதான் இருக்கிறார்கள். இன்னும் பல சிதைவுகள் நம் பண்பாட்டை அழித்துவருகின்றன. திட்டமிட்டே செயல்படுத்துவார்களோ?? எனும் எண்ணம் எழுகிறது. எளிமையாக கூறினால் ......

      இந்திமொழி நாடகங்கள் (serial ) தமிழ் மொழியில் மொழிமாற்றம் செய்து நம்மை மாற்றிவருகிறது. மதுபாலா எனும் நாடகத்தை பார்த்து தமிழ்நாட்டு ஜவுளிக்கடைகளில் மதுபாலா சுடிதார் ஏகபோகமாக விற்கப்பட்டது. அதன்பின் மதுபாலா சுடிதார் விளம்பரதுறையிலும் பின் திறைத்துறையிலும் நுழைந்தது. பெரியவர்கள் தொடங்கி 4 வயது சிறுகுழந்தைகள் உட்பட மதுபாலா சுடிதார் பிரபலமாக்கப்பட்டது. ஏன்.... திருமணமான புது பெண்கள் இப்போது வரவேற்புக்கு ( Reception ) மதுபாலா சுடிதாரைத்தை உடுத்துகிறார்கள். ஒரு நாடகத்தால் மட்டும் இந்த தாக்கமென்றால் இன்னும் பல நாடகங்கள், நிகழ்ச்சிகள் நம் தொலைக்காட்சியிலே நடைபெறுகிறது.

       இந்த செய்தியை எப்படி நிறைவுக்கு கொண்டு வர வேண்டுமென தெரியவில்லை ஏனெனில் இதன் நீட்ச்சி ஒவ்வொன்றாக வளர்ந்துகொண்டே செல்கிறது. நாம்தான் விளிப்போடு இருந்து எதனை வாங்குவது ,எதனை வாங்ககூடாது மற்றும் எதனை ஆதரிப்பது எதனை ஆதரிக்ககூடாது என்று சிந்தித்து செயல்படவேண்டும். நல்லதை பயன்படுத்த வேண்டும் அந்த நல்லதையே நம் பிள்ளைகளுக்கும் விட்டுசெல்லவேண்டும்...

Monday, 1 February 2016

ஆசிரியர்களே..

     

                 எந்த நாடு ஆசிரியர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லையோ அந்த நாடு வளராது... செய்திதாளில் ஆசிரியர்களை அடுத்து இழுத்து செல்லுவது போலவும், கையையும் காலையும் பிடித்து தூக்குவது போலவும் இருந்தது.  மேலைநாடு மேலைநாடு என்கிறீர்களே உங்கள் மேலைநாடுகளில் ஆசிரியர்களை இப்படியா நடத்துகிறார்கள்?

                நம்ம ஆட்சியாளர்களை யாரோடு ஒப்பிடன்னு தெரியல.வாச்சதும் அப்படித்தான் இருக்கு, வந்ததும் அப்படித்தான் இருக்கு... தேர்தல் வேற வரப்போகுது.யாருக்கு ஓட்டுபோடன்னு தெரியல... 49ஒ தானா!!!

Thursday, 28 January 2016

"கொல்ல வரும் ஸ்மார்ட் சிட்டி"

           ஸ்மாட் சிட்டி திட்டத்துக்காக 98நகரங்கள் தேர்வாகியுள்ளன. இவற்றில் 20 நகரங்கள் அடங்கிய முதல்கட்ட பட்டியல் வெளியிடப்பட்டது.

       இந்த 98 நகரங்களும் 5ஆண்டு காலத்தில் திறன்மிகு நகரங்களாக உருவாக்கப்படும். இவற்றில் 24 நகரங்கள் மாநில தலைநகரங்கள் , 24 தொழில் வர்த்தக நகரங்கள்,18 கலாச்சாரம் மற்றும் சுற்றுலா சார்ந்த நகரங்கள்,5 துறைமுக நகரங்கள், 3 கல்வி மற்றும் மருத்துவம் சார் நகரங்கள் அடங்கும்.

        இளம் இந்தியாவின் பேராவலை பூர்த்தி செய்யும் விதத்தில் ஒருங்கிணைந்த நீடித்த வளர்ச்சிக்கான கருவிகளாக ஸ்மார்ட் நகரங்கள் உருவாக்கபபடும். இந்திய மக்களின் பொருளாதாரம், உழைப்பு, மதிப்பு போன்றவற்றை உயர்த்தும் அருமையான திட்டங்கள். கேட்க நல்லா இருக்கு ஆனா கொஞ்சம் பயமா இருக்கு. இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் எத்ததை பேர் தங்கள் கைவரிசையை காட்டப்போகிறார்கள் என்று...

       " தனி ஒருவன் " படத்தில் வரும் வசனம் என் நினைவுக்கு வருகிறது. எந்த ஒரு பெரிய விசயத்துக்கு முன்னாலையும் ஒரு சின்ன விசயம் இருக்கு. ஆக ஸ்மார்ட் சிட்டி திட்டத்த செயல்படுத்துறதால இந்ததிட்டத்தின் அதிகாரகளுக்கு நிச்சயம் லாபம் வரப்போகிறது. இல்லைன்னா "MAKE IN INDIA " வுக்காக வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பாதை அமைப்பதாக கூட இருக்கலாம்.

         ஸ்மாட் சிட்டின்னு தடையில்லாமல் மின்சாரம், போக்குவரத்து, நெடுஞ்சாலை, குழாய் குடிநீர், தரமான தொலைதொடர்பு , நிலம்ன்னு எல்லாவற்றையும் நம் கண்முன்னே செயல்படுத்துவார்கள். அதேப்போல நம் கண்முன்னே வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தாரைவார்த்து கொடுப்பார்கள். ஏற்கனவே நம் ஊரில் இருக்கிற வெளிநாட்டு நிறுவனஙாகளால் நம் நீர் வளம் (தாமிரபரணி), நில வளம் (கனிமங்கள்), மின்சாரங்கள் , காற்று மாசுபாடு , பொருளாதாரம் , குடிசை தொழில் பாதிப்பு, சுரண்டல்னு பல சீர்கேடுகள் நடக்கிறது. இதுல இப்புடி புதுசா செய்தால்  நாம் என்ன செய்வது? வழக்கமா அமைதியா இருக்கிறமாதிரி நாம் இப்போது இருக்க கூடாது.

         ஒரு உண்மை என்னவெனில் "MAKE IN INDIA" , "SMART CITY" போன்ற திட்டங்களை ஆதிக்கும் அதிகாரிகளுக்கு பன்னாட்டு நிறுவனங்களுடன் தொடர்பு இருக்க வாய்ப்பு உள்ளது எனபதே. சும்மாவே ஆடு புலி ஆட்டம் ஆடுவாங்க , இப்ப சொல்லவா வேண்டும்???

   ஆக ஸ்மார்ட் சிட்டி நகரத்திற்கு ஏதோ வழியில் , ஏதோ ஒரு முறையில் உள் நோக்கங்கள், உள் திட்டங்ள் இருப்பது நிச்சயம்...

     நகர்புற மக்கள் தொகை 40 கோடியிலிருந்து, 2050-ல் 81.4 கோடியாக உயரும். தீவிர நகர்மயமாதலை சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா எதிர்நோக்கியுள்ளது. சீன மக்களுக்கு வேலையே நகர்புறங்களில்தான் ஆனால் இந்தியாவுக்குஅப்படியில்லை. இந்தியா என்றாலே விவசாயம். "இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம் ". இந்த இரு நாடுகளையும் ஒப்பிடுவது சரியல்ல . விவசாயத்தை அழிக்க நினைக்கும் புதிய முயற்சி இது. விவசாயத்துக்கு எதிரா இருக்கிற பன்னாட்டு நிறுவனங்கள் அதிக ஈடுபாடு காட்டுவார்கள். அவர்களுக்கு இந்த திட்டத்தின் உள்நோக்கம் பற்றி தெரியவாய்ப்புள்ளது.

      நகர்புற மேம்பாட்டு துறையின் கீழ் வேளாண்மை மேம்பாட்டு துறை தூங்குகிறதா? அல்லது தூங்க வைக்கப்பட்டதா??? யாருக்கு தெரியும். நமக்கு மகிழ்சியான வாழ்வுக்கு நகரமா ? கிராமமா?ன்னு பட்டிமன்றங்கள்தான் வைக்கதெரியும்!!! கேபப்படாதீர்கள் ஆனால் உண்மை அதுதான்.

      முதல்ல மற்ற நாடுகளுடன் நம்ம நாட்டை ஒப்பிடுவதை நிறுத்துவோம். நம்ம நாட்டு வளங்களை நாம் பயன்படுத்தி நம்ம நாட்டு பொருளாதாரத்தை உயர்த்துவோம். விவசாயத்துக்கு தடையாக நிற்கும் திட்டங்களை எதிப்போம்.

Wednesday, 20 January 2016

ஆடைக்கலாச்சாரம்

               நேற்று கல்லூரியிலே ஒரு பெண் உடுத்தியிருந்த உடையின் மாதிரி தான் இது.இந்த உடையை பார்த்தவுடன் என் மனதிற்குள் பல கேள்விகள் எழும்பியது. அந்த உடை மாதிரியை இந்த குறுஞ்செய்தியினுடன் சேர்ப்பதர்க்காக Google imageல் தேடினேன். அங்கே நான் கண்ட ஆடைகள் மன அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலர் ஆடைக்கலாச்சாரம் பற்றி பேசும் போது எனக்கு மனது உருத்தவில்லை. ஆனால் கண்முன்னே காணும் போது மிகவும் கொடுமையாக இருந்தது. அந்த ஆடையை மட்டும்தான் என்னால் வரைய முடிந்தது.அதனுள் இருந்த வடிவமைப்புக்கள் மிகவும் கொடுமை.
    
           எப்படி இத்தகைய ஆடைகளை வாங்குகிறார்கள்?

           துணிக்கடைக்கு செல்லும் போது பெற்றோர்களும் கூடவே இருப்பார்கள்தானே?

           ஒரு வேளை அந்த பெண்னுக்கு அம்மா தவறியிருப்பார்களோ?

            அப்பா அதிக செல்லம் கொடுத்து வளர்த்திருப்பார்களோ?

            அந்த பெண்ணுக்கு அண்ணன்,தம்பி இருக்கமாட்டார்களோ? இன்னும் பெரியவர்கள் ,தோழிகள் ,உறவினர்கள் என்று அதிக கேள்விகள் எழுந்துகொண்டே இருந்தது.

            பல துறைகளில் பெண்கள் சாதனைப்படைத்து சமநிலையடைந்து வருகிறார்கள்.ஆனால் பெண்களுக்கான தற்போதைய ஆடைக்கலாச்சாரம் என்பது சமநிலையல்ல. பெண்களுக்கான ஆடைக்கலாச்சாரம் என்று பேசும்போது ஆண்களுக்கும் இது பொருந்தும்.ஆனால் சமுதாயத்திலே பெண்களுக்கு வரலாறுதொட்டு பாரம்பரியம் உள்ளது.

            இந்தியா பன்னாட்டு நிறுவனங்களுக்கு வெறும் வியாபார சந்தை. ஆனால் இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் "இந்தியாவே உயிர்". வியாபாரிகள் பலவற்றை நம் மண்ணில் விற்பனை செய்கின்றனர். அவற்றை ஆதரிக்கும்படி செய்தால் நாம்தான் பாதிக்கப்படுவோம்.நம் கலாச்சாரம்தான் பாதிக்கப்படும்.

            ஆடைக்கலாச்சாரம் என்று பேசும் ஒவ்வொருவரும் பன்னாட்டு ஆடைகளை தவிர்த்தால் மட்டுமே நம் கலாச்சாரம் பாதிக்கப்படாது.