Wednesday, 5 April 2017

Experience as a Visual communication Student



                          I’m Antony Prince, a Visual communication student of St.Xavier’s College, Palayamkotai in the year of 2014 – 2017. I would like to thank my Head of the department Rev. Fr. Xavier Antony S.J, Mr. Anto Kinsley and Rev. Fr. Infant Kinsley S.J. My Professors are Mr. Vijay, Mrs. Josephine Mary, Mr. Sahaya babu, Mr. Santhosh Kumar, Mr.Doulous and Ms. Reenu Maria.
In the year of (2014 - 2015), I joined B.sc Visual Communication. It’s an honor to say that I am a Xaverian.  
                                                                                        
             The first visit was that we met the students of Florescence of Deaf and Dum School. Though they cannot speak or hear, they persuaded many talents.  We interacted with them by using interpersonal communication (face to face communication). 
                         In the morning time of the college, we were asked to watch short films and discussing on that which helped to see many short films and know how to criticize. We also have done cartoon art on different types of communication. I started writing in Blog Spot. I spent lot of time in college browsing center and college library. I developed reading and witting skills.  We had face painting work shop in which we painted on our friends face about social issues.
                     

                       In the second year of my college life is full of Practical papers and learning software like Adobe Photoshop, Adobe illustrator, Adobe in design also Photography, Short film making. We got an opportunity to visit the Noochikulam village for our STAND program. We had four field visit and one camp in that village. I was coordinating that one day camp. I was very much inspirited by Noochikulam people’s hospitality. They treated me as one of their family member.
I did a short film that’s supporting formers. At the end of my second year I did my internship in 3G channel which is in Vallioor. I learnt to set program in that channel and about Adobe After Effect software. During this time I started my You Tube Channels named ANTONY PRINCE.

                    Third year of my college life went on super fast. While street play workshop I learnt to think using emotional and available properties for street play. In the month of December and January for the second internship, I did in PUTHIYA THALAI MURAI magazine at Chennai. There I met many writers, social activist, celebrities. I came to know that reporting or journalism is just to fill the layouts. I created my second you tube channel and named KOMALI. We contacted ART BEAT function among visual communication students from various colleges. In the last semester we went to visit Chitharal Jain Temple at Marthandam recording art and visual aesthetic paper.  I made a simple and short documentary film about that Jain temple and published in my channel. We also visited Slum clearance apartment in Reddyarpatti. I couldn’t bear their sufferings so I made a video which describes their life style, problems, education, cleanliness, job, etc and published in my channel.





Sunday, 2 April 2017

‘டோரா’ படத் திரைவிமர்சனம்- Dora Film Review







நடிகர்கள்நயன்தாரா,ஹரிஷ் உத்தமன், தம்பி ராமையா, சுலில்குமார்,
இயக்கம்தாஸ் ராமசாமி
சினிமா வகைHorror

    கரு : தன்னைக் பலாத்கரம் செய்து கொன்றவர்களை பழி தீர்க்கும் எட்டு வயது சிறுமி மற்றும் அச்சிறுமியின் நாய் தான் கரு. 

    கதை : முன்பு தன் அப்பாவும் , குடும்பமும் செய்த உதவியால் பல கார் களுடன் கால்டாக்ஸி நிறுவனம் நடத்திய , தன் அத்தையும் , அத்தை வீட்டுக்காரரும் தனக்கும் , தன் அப்பாவுக்கும் தகுந்த மரியாதை தராததால் பொங்கி எழும் நயன்தாரா , தானும் ஒரு கால் டாக்ஸி முதலாளி ஆகி , அத்தை மாமா நிறுவனத்தை இழுத்து மூடவேண்டும் என்று தன் அப்பா தம்பி ராமைய்யா வை உசுப்பி விட்டு, இருந்த காசை எல்லாம் போட்டு பழைய மாடல் கார் ஒன்றை வாங்கி விடுகிறார். 

     தன்னை பலாத்கரம் செய்து அடித்துக் கொன்றவர்களை நயன் தாரா மூலமாகவும் , தான் வளர்த்து வந்த அந்த நாயின் மூலமாகவும், அந்தக் பழைய காலத்து காரை பயன்படுத்தி எப்படி அந்த சிறுமியின் ஆவியும் நாயும் விரட்டி , விரட்டி பழி தீர்க்கிறது என்பதுதான் " டோரா " படத்தின் கதை மொத்தமும். 
                 ஒரு வழக்கமான பழிவாங்கல்  பேய்க்  கதையில் பேய்க்கு ஒரு வித்தியசமான வடிவத்தைக் கொடுத்திருப்பதன் மூலம் வேறுபடுத்திக்காட்டியிருக்கிறார்கள். இரண்டாம் பாதியில் பேயின் பின்கதையும் பழிவாங்கலுக்காக சொல்லப்படும் காரணமும் வழக்கமானதுதான். ஃப்ளாஷ்பேக் முடிந்தபின் சூடுபிடிக்கும் படம் சுவாரஸ்யமாகவே நகர்கிறது. 
     
                    கதையில் லாஜிக் சறுக்கல்கள் பல இடங்களில் உறுத்துகின்றன. நயன்தாரா கார் விற்பனைக் கடையின் சிசிடிவி கேமரா பதிவுகளை மிக எளிதாகப் பெறுவது, ஓடும் காரிலிருந்து கீழே விழுந்து உருண்டுகொண்டே தப்பிப்பதெலாம் லாஜிக் சரறுக்கல்கள்தான். தம்பி ராமையா காமடியில் கடுப்பேற்றினாலும் ஒரு சில எமோசனல் காட்சிகளில் வழக்கம்போல் தனது முத்திரையை பதிக்கிறார் . ஹரீஷ் உத்தமன் மிடுக்கான போலீஸ் அதிகாரியைக் கண் முன் நிறுத்துகிறார்.

    மொத்தத்தில், நயன்தாராவின் நடிப்புக்காகவும் சில மாஸ் காட்சிகளுக்காகவும் ஓரளவு விறுவிறுப்பான இரண்டாம் பாதிக்காகவும் ‘டோரா’ படத்தை ஒரு முறை பார்க்கலாம் .  

    Friday, 17 March 2017

    குடிசை மாற்று வாரியம், ரெட்டியார்பட்டி , திருநெல்வேலி



                         சொந்த மண்ணை பிரிதல் என்பது மிகவும் கடினமானது. அப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்வது கொடுமையானதும் கூட . பல்வேறு காரணங்களால், நிபந்தனைகளால் கட்டாயத்தோடு குடிபெயர்ந்து அனுப்பப்படுவார்கள் பலர். ஆம், அவர்கள் குடிபெயர்ந்து செல்லவில்லை, குடிபெயர்ந்து அனுப்பப்பட்டார்கள் . புதிய இடம் , புதிய மண் என்று அனைத்தும் புதியதாக திணிக்கப்படுகிறது. அதுவும் முழுவதும் கிடைக்கப்பெறவில்லை , கண்துடைப்புக்காக செயல்படுவதால் என்னவோ பல பாதிப்புக்கள் அவர்களுக்குத்தான் ஏற்படுகின்றது .



                                       திருநெல்வேலி மாவட்டம் , நெல்லை சந்திப்பில் தாமிரபரணி ஆற்றங்கரையில் வாழ்ந்த மக்களை தமிழக அரசு "குடிசை மாற்று வாரியத் திட்டத்தின் " கீழ் சுத்தமல்லி , டவுன், ரெட்டியார் பட்டி  போன்ற பல பகுதிகளில் குடிபெயர செய்துள்ளது. இயற்கை சீற்றம் , நோய்கள் மற்றும் பிற காரணங்களால் பாதிக்கப்பட்ட இம்மக்களுக்கு இத்திட்டம் வரப்பிரசாதமாகவே  இருந்தது . ஆனால் , குடிபெயர்ந்து புதிய இடத்தில் வாழும் போது அடிப்படை வசதி,போக்குவரத்து ,மருத்துவம்,நீதி போன்ற உரிமைகள் நிராகரிக்கப்படுகின்றது . 

                              இத்தகைய புதிய வாழ்கையை  வாழும் ரெட்டியார் பட்டியில் குடியமர்த்தப்பட்டிருக்கும் மக்களை சந்திக்க நேர்த்தது . 17 அடுக்குமாடிக்கட்டிடங்களால் காவல் துறையினருக்காக உருவாக்கப்பட்ட அந்த கட்டிடங்களை  இவர்களுக்காக ஒதுக்கப்பட்டுஉள்ளது . சுமார் 306 குடும்பங்கள் தங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட இந்த அடுக்கு மாடிக்கட்டிடங்களில் தற்போது 120 குடும்பங்கள் மட்டுமே குடிபெயர்த்துள்ளனர் . மீதமுள்ள மக்கள்  வேறு இடங்களில் சுயமாக குடிபெயர்த்துள்ளனர். 

                            இம்மக்களிடம் பேசும்போது , இவர்கள் அனைவரும் கூறிய ஒரே வார்த்தைகள் " நாங்க .... அங்க இருந்தப்போ, சந்தோசமா நிம்மதியா இருந்தோம் , இங்க எதுமே இல்லை...." அப்படி அவர்களுக்கு என்னதான் பிரசனைகள் என்று வினவிய போது தான்  தெரியவந்தது , அவர்களின் நிலைமை . 

                              1) நியாயமாக வழங்க  வேண்டிய நியாய விலைக்கடையில் பார்ப்பட்சததோடு பொருட்கள் கொடுப்பதும் , பல நேரங்களில் பொருட்க்ள் இருந்தும் இல்லை என்று ஏமாற்றுவதும் வாடிக்கையாகிவிட்டது .

                       2). கழிவு நீரை சுத்தப்படுத்துவதற்க்காக நகராட்சி ஊழியர்கள் வருவதில்லை. அப்படியே வந்தாலும் பொடி தூவி விட்டு, சாக்கடை துத்தம் செய்வதற்காக பணம் கேட்பதாக கூறுகிறார்கள் .

                                     3).  சரியான போக்குவரத்து மறுக்கப்படும் காரணத்தால் , பள்ளி செல்ல வேண்டிய குழந்தைகளின் கல்வி பறிக்கப்படுகிறது.

                            4). வேலைக்கு செல்லும் ஆண்கள் தினமும் நெல்லை சந்திப்பு செல்ல கையில் இருக்கும் இருப்புப்பணத்தையும்  செலவழிக்க வேண்டியுள்ளது . 

                             5). திடீரென தேவைப்படும் மருத்துவ உதவிக்கு , அவசர ஊர்தியோ , அருகாமையில் மருத்துவமனையோ இல்லை.

                   6). தங்கியிருக்கும் வீட்டிற்கு மாதம் 300 ரூபாய் கொடுக்கிறோம் .ஆனால் கட்டிடம் பாசிப்பிடித்து , நேர் ஊற்றும் , வீட்டின் மேல் செடிகளும் வளர்த்து பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது.

                           - என்று அடிப்படை வசதிகளே முழுமையாக கிடைக்காமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்றனர். அடிப்படை வசதிகளே இல்லாத போது  எப்படி நிம்மதியாக வாழ இயலும் என்பதே அவர்கள் எழுப்பும் கேள்வியாக இருக்கிறது. 

                   ஆக , உணவு, கல்வி,சுகாதாரம் , இருப்பிடம்,போக்குவரத்து,மருத்துவம் என்று எட்டு திசையிலும் பிரசனைகளால் சூழபட்டிருக்கும் இம்மக்களின் அவல குரலுக்கு அரசாங்கம் என்ன பதில் வைத்துள்ளதோ ?. அந்த பதில் அவர்கள் இழந்ததை எப்படி திருப்பி கொடுக்கும் ?

                ஆனால் , அவர்களின் குரல் மேலதிகாரிகளுக்கு எட்டிவிடாமல் இடை அதிகாரர்களால் தடுக்கப்படுகிறது. மூடி மறைக்கப்படுகிறது . இதற்கு என்ன தீர்வு கிடைக்குமோ ?

    Wednesday, 8 March 2017

    தமிழகத்தில் நடப்பது இன அழிப்பா?



                இன்று தமிழ் இனத்தை அழிப்பதற்காக நிலம், நீர், காற்று, கல்வி, வேலை வாய்ப்பு, மருத்துவம் , வேளான்மை, பொருளாதாரம்,அரசியல், நீதி, கலாச்சாரம் போன்ற பலவழிகளில் செயல்பட்டு வருகிறார்கள். இதற்காக அவர்கள் கையிலெடுத்து இருப்பது: ஹைட்ரோ கார்பன் திட்டம், பெப்சி, கோக் ஆலைகளுக்கு அனுமதி, குலக் கல்வி முறை, நீட் தேர்வு, ரூபெல்லா ஊசி, விவசாயத்திற்க்கு தண்ணீர் கொடுக்காதது, காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காதது, வேளாண்மை கல்லூரிகளின் மூலம் செயற்கை உரம், பெட்ரோல் விலையேற்றம், ஊழல், தமிழர்களுக்கு எதிராக நீதி, மீனவர்கள் சுட்டுக் கொலை, ஆதிச்சநல்லூர், கீழடி அகழ்வாராய்ச்சி நிறுத்தம் என்று இன்னும் பல தொகுத்துக் கொண்டே போகலாம். மறைமுகமாகவும் பல நூறு செயல்பாடுகள் நடந்துக் கொண்டே இருக்கிறது.
               
                 இவற்றால் நம் வரலாறு, நம் தலைமுறைகள் என்று அனைத்தும் அழிக்கப்படுகிறது. பல ஆயிரக்கணக்கான மக்கள் நீதிக் கிடைக்காமல், சரியான கல்விக் கிடைக்காமல், வேலைவாய்ப்புக் கிடைக்காமல், பொருளாதாரத்தில் முன்னேற்றம் இல்லாமல், சொந்தங்களை இழந்து, கணவன், மனைவி, மகன், மகள், அப்பா, அம்மா என்ற உறவுகளை இழந்து, சொந்த மண்ணிலே அகதிகளாக அலைக்கழிக்கப்படுகிறார்கள்.

                  இவற்றை நாம் எப்படி ஈடு செய்யப்போகிறோம்? நாம் இழந்ததை எப்போது திரும்பப் பெறப்போகிறோம்? அரசாங்கமோ ! தொடர்ந்து கடிதங்களை மட்டுமே எழுதிக்கொண்டு இருக்கிறது. ஆபத்தான திட்டங்கள் வரும்போது நமக்கு எதிராகவும் நிற்கிறது. தன்னார்வத்தோடு பலர் இச்சட்டங்களுக்கு எதிராகவும் அவர்களுக்கு எதிராகவும் போராடுகிறார்கள். நம் போராட்டம் எப்பவுமே அறவழிப்போராட்டமாகவே அமைந்து விடுகிறது. நம் முன்னோர்கள் கையாண்ட அறவழிப்போராட்டத்தையே நாமும் மேற்கொண்டு வருகிறோம். அறவழியே சிறந்த வழி. ஆனால், இந்த அறவழிப் போராட்டத்தால் நம் மக்களும் பாதிக்கப்படுகிறார்களே. இதற்கு என்னதான் தீர்வு?

                     நம்மிடையே கலகத்தை ஏற்படுத்தியவர்கள், ஆபத்தான சட்டத்தை உருவாக்கியவர்கள், நம் வளத்தை, பொருளாதாரத்தை சுரண்டுபவர்கள் நிம்மதியாக இருக்கிறார்களே… குறிப்பிட்ட பகுதிக்குள்ளே அறவழிப்போராட்டத்தில் ஈடுபடுவதால் பொருளாதாரம், நேரம் என்ற பாதிப்புக்களும் ஏற்படுகிறது. அதுவும் நமக்கு தானே… நம்முடைய பாதிப்புக்களை அவர்கள் உணர வேண்டும். அவர்களுடைய கவனத்தை நம்மீது ஈர்க்க வேண்டும்.


                      நம் இனத்தை, நம் கலாச்சாரத்தை, நம் வளங்களை, நம் தலைமுறையை காக்க விரைந்து செயல்படவேண்டும்.

    Tuesday, 14 February 2017

    ஒரு ஊர்ல....







                         




           ஒரு ஊர்ல ஒரு பெரிய குளம் இருந்துச்சி . அந்த குளத்தால் தான் பல பேர் வாழ்த்துக்கிட்டு இருந்தாங்க . அந்த ஊர் மக்களும் அந்த குளத்து மீன்களைத்தான் சமைச்சி சாப்பிட்டுக்கிட்டு வந்தாங்க . அந்த மக்களுக்கு எந்த நோயும் வரல. சந்தோசமா இருந்தாங்க. ஏன்னா ? அவங்களுக்கு தேவையான சக்தியை அந்த குளத்து மீன்கள் குடுத்திச்சி . மீன்களை அவங்க மற்ற ஊர்களுக்கும் ஏற்றுமதி செய்தாங்க.
                        பக்கத்து ஊர்ல ஒரு டாக்டர் இருந்தார். அவருக்கு இவங்க சந்தோசமா நோயில்லாம இருக்கிறதுனால நோயாளின்னு அவரு ஆஸ்பத்திரிக்கு யாரும் வருறது கிடையாது. இதுக்கு ஏதாவது செய்யணுமேன்னு யோசித்தார். 
                                        மறுநாள் அந்த குளத்துல யாரோ காப்பாத்துங்கன்னு கத்துறத பாத்துட்டு , அந்த ஊர்காரங்க காப்பாத்த முயற்சி செய்தாங்க . அவங்ககிட்ட சாதாரண படகு இருந்ததுனால அவங்களால நாடு குளத்துக்கு போகமுடியல .

                       உடனே பக்கத்து ஊர்ல இருந்து மோட்டார் படகுகளை கொண்டுவந்து நடுக்குளத்துக்கு போனாங்க . போகும்போது திடீர்னு மோட்டார் படகுகள் ஒண்ணோடுஒன்னு மோதி அதுல இருந்த எண்ணெய் டிரம் எல்லாம் உடைஞ்சி  குளத்துல பரவ ஆரம்பிச்சது .

                  உயிருக்கு போராடிய அந்த நபரை காப்பாத்திட்டாங்க . ஆனா கொஞ்ச நேரத்துலயே அந்த எண்ணெய்  குளம் முழுசா பரவ ஆரம்பிச்சது.

                    ஊர் தலைவருக்கு இந்த செய்தி கிடைச்சும் எதுமே செய்யல.... ஊர்ல இருந்த இளைஞர்கள் வந்து எண்ணையை அள்ள ஆரம்பிச்சாங்க .கூட்டம் கொங்சம் கொஞ்சமா சேந்தது . 
                    
                   மோட்டரை பயன்படுத்தினா எண்ணையை சீக்கிரம் அள்ளிடலாம் ன்னு ஒரு கூட்டம் ஊர் தலைவரை பாக்க போனாங்க . 

             ஊர் தலைவர், அந்த  பக்கத்து ஊர் டாக்டரோட பேசிக்கிட்டு இருந்தார். விஷயத்தை சொன்னதும் , அப்படியா.... சரி..... எண்ணையை சீக்கிரம் அள்ள எல்லாருக்கும் வாளி வாங்கி குடுங்க வேலை சீக்கிரம் முடிஞ்சிடும்ன்னு சொல்லிட்டு மறுபடியும் அந்த டாக்டர் கூட பேச வீட்டுக்குள்ள போயிட்டாரு. 
          பாவம் அந்த ஊர் மக்கள் இரவும் பகலும் அந்த குளத்தை  காப்பாத்த எண்ணையை வெறும் வாளியை வச்சி அள்ளிக்கிட்டு இருந்தாங்க....