
இன்று தமிழ் இனத்தை அழிப்பதற்காக நிலம், நீர்,
காற்று, கல்வி, வேலை வாய்ப்பு, மருத்துவம் , வேளான்மை, பொருளாதாரம்,அரசியல், நீதி, கலாச்சாரம்
போன்ற பலவழிகளில் செயல்பட்டு வருகிறார்கள். இதற்காக அவர்கள் கையிலெடுத்து இருப்பது:
ஹைட்ரோ கார்பன் திட்டம், பெப்சி, கோக் ஆலைகளுக்கு அனுமதி, குலக் கல்வி முறை, நீட் தேர்வு,
ரூபெல்லா ஊசி, விவசாயத்திற்க்கு தண்ணீர் கொடுக்காதது, காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காதது,
வேளாண்மை கல்லூரிகளின் மூலம் செயற்கை உரம், பெட்ரோல் விலையேற்றம், ஊழல், தமிழர்களுக்கு
எதிராக நீதி, மீனவர்கள் சுட்டுக் கொலை, ஆதிச்சநல்லூர், கீழடி அகழ்வாராய்ச்சி நிறுத்தம்
என்று இன்னும் பல தொகுத்துக் கொண்டே போகலாம். மறைமுகமாகவும் பல நூறு செயல்பாடுகள் நடந்துக் கொண்டே இருக்கிறது.
இவற்றால் நம் வரலாறு, நம் தலைமுறைகள் என்று
அனைத்தும் அழிக்கப்படுகிறது. பல ஆயிரக்கணக்கான மக்கள் நீதிக் கிடைக்காமல், சரியான கல்விக்
கிடைக்காமல், வேலைவாய்ப்புக் கிடைக்காமல், பொருளாதாரத்தில் முன்னேற்றம் இல்லாமல், சொந்தங்களை
இழந்து, கணவன், மனைவி, மகன், மகள், அப்பா, அம்மா என்ற உறவுகளை இழந்து, சொந்த மண்ணிலே
அகதிகளாக அலைக்கழிக்கப்படுகிறார்கள்.
இவற்றை நாம் எப்படி ஈடு செய்யப்போகிறோம்? நாம்
இழந்ததை எப்போது திரும்பப் பெறப்போகிறோம்? அரசாங்கமோ ! தொடர்ந்து கடிதங்களை மட்டுமே
எழுதிக்கொண்டு இருக்கிறது. ஆபத்தான திட்டங்கள் வரும்போது நமக்கு எதிராகவும் நிற்கிறது.
தன்னார்வத்தோடு பலர் இச்சட்டங்களுக்கு எதிராகவும் அவர்களுக்கு எதிராகவும் போராடுகிறார்கள்.
நம் போராட்டம் எப்பவுமே அறவழிப்போராட்டமாகவே அமைந்து விடுகிறது. நம் முன்னோர்கள் கையாண்ட
அறவழிப்போராட்டத்தையே நாமும் மேற்கொண்டு வருகிறோம். அறவழியே சிறந்த வழி. ஆனால், இந்த
அறவழிப் போராட்டத்தால் நம் மக்களும் பாதிக்கப்படுகிறார்களே. இதற்கு என்னதான் தீர்வு?
நம்மிடையே கலகத்தை ஏற்படுத்தியவர்கள், ஆபத்தான
சட்டத்தை உருவாக்கியவர்கள், நம் வளத்தை, பொருளாதாரத்தை சுரண்டுபவர்கள் நிம்மதியாக இருக்கிறார்களே…
குறிப்பிட்ட பகுதிக்குள்ளே அறவழிப்போராட்டத்தில் ஈடுபடுவதால் பொருளாதாரம், நேரம் என்ற
பாதிப்புக்களும் ஏற்படுகிறது. அதுவும் நமக்கு தானே… நம்முடைய பாதிப்புக்களை அவர்கள் உணர வேண்டும்.
அவர்களுடைய கவனத்தை நம்மீது ஈர்க்க வேண்டும்.
நம் இனத்தை, நம் கலாச்சாரத்தை, நம் வளங்களை,
நம் தலைமுறையை காக்க விரைந்து செயல்படவேண்டும்.
No comments:
Post a Comment