Friday, 17 March 2017

குடிசை மாற்று வாரியம், ரெட்டியார்பட்டி , திருநெல்வேலி



                     சொந்த மண்ணை பிரிதல் என்பது மிகவும் கடினமானது. அப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்வது கொடுமையானதும் கூட . பல்வேறு காரணங்களால், நிபந்தனைகளால் கட்டாயத்தோடு குடிபெயர்ந்து அனுப்பப்படுவார்கள் பலர். ஆம், அவர்கள் குடிபெயர்ந்து செல்லவில்லை, குடிபெயர்ந்து அனுப்பப்பட்டார்கள் . புதிய இடம் , புதிய மண் என்று அனைத்தும் புதியதாக திணிக்கப்படுகிறது. அதுவும் முழுவதும் கிடைக்கப்பெறவில்லை , கண்துடைப்புக்காக செயல்படுவதால் என்னவோ பல பாதிப்புக்கள் அவர்களுக்குத்தான் ஏற்படுகின்றது .



                                   திருநெல்வேலி மாவட்டம் , நெல்லை சந்திப்பில் தாமிரபரணி ஆற்றங்கரையில் வாழ்ந்த மக்களை தமிழக அரசு "குடிசை மாற்று வாரியத் திட்டத்தின் " கீழ் சுத்தமல்லி , டவுன், ரெட்டியார் பட்டி  போன்ற பல பகுதிகளில் குடிபெயர செய்துள்ளது. இயற்கை சீற்றம் , நோய்கள் மற்றும் பிற காரணங்களால் பாதிக்கப்பட்ட இம்மக்களுக்கு இத்திட்டம் வரப்பிரசாதமாகவே  இருந்தது . ஆனால் , குடிபெயர்ந்து புதிய இடத்தில் வாழும் போது அடிப்படை வசதி,போக்குவரத்து ,மருத்துவம்,நீதி போன்ற உரிமைகள் நிராகரிக்கப்படுகின்றது . 

                          இத்தகைய புதிய வாழ்கையை  வாழும் ரெட்டியார் பட்டியில் குடியமர்த்தப்பட்டிருக்கும் மக்களை சந்திக்க நேர்த்தது . 17 அடுக்குமாடிக்கட்டிடங்களால் காவல் துறையினருக்காக உருவாக்கப்பட்ட அந்த கட்டிடங்களை  இவர்களுக்காக ஒதுக்கப்பட்டுஉள்ளது . சுமார் 306 குடும்பங்கள் தங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட இந்த அடுக்கு மாடிக்கட்டிடங்களில் தற்போது 120 குடும்பங்கள் மட்டுமே குடிபெயர்த்துள்ளனர் . மீதமுள்ள மக்கள்  வேறு இடங்களில் சுயமாக குடிபெயர்த்துள்ளனர். 

                        இம்மக்களிடம் பேசும்போது , இவர்கள் அனைவரும் கூறிய ஒரே வார்த்தைகள் " நாங்க .... அங்க இருந்தப்போ, சந்தோசமா நிம்மதியா இருந்தோம் , இங்க எதுமே இல்லை...." அப்படி அவர்களுக்கு என்னதான் பிரசனைகள் என்று வினவிய போது தான்  தெரியவந்தது , அவர்களின் நிலைமை . 

                          1) நியாயமாக வழங்க  வேண்டிய நியாய விலைக்கடையில் பார்ப்பட்சததோடு பொருட்கள் கொடுப்பதும் , பல நேரங்களில் பொருட்க்ள் இருந்தும் இல்லை என்று ஏமாற்றுவதும் வாடிக்கையாகிவிட்டது .

                   2). கழிவு நீரை சுத்தப்படுத்துவதற்க்காக நகராட்சி ஊழியர்கள் வருவதில்லை. அப்படியே வந்தாலும் பொடி தூவி விட்டு, சாக்கடை துத்தம் செய்வதற்காக பணம் கேட்பதாக கூறுகிறார்கள் .

                                 3).  சரியான போக்குவரத்து மறுக்கப்படும் காரணத்தால் , பள்ளி செல்ல வேண்டிய குழந்தைகளின் கல்வி பறிக்கப்படுகிறது.

                        4). வேலைக்கு செல்லும் ஆண்கள் தினமும் நெல்லை சந்திப்பு செல்ல கையில் இருக்கும் இருப்புப்பணத்தையும்  செலவழிக்க வேண்டியுள்ளது . 

                         5). திடீரென தேவைப்படும் மருத்துவ உதவிக்கு , அவசர ஊர்தியோ , அருகாமையில் மருத்துவமனையோ இல்லை.

               6). தங்கியிருக்கும் வீட்டிற்கு மாதம் 300 ரூபாய் கொடுக்கிறோம் .ஆனால் கட்டிடம் பாசிப்பிடித்து , நேர் ஊற்றும் , வீட்டின் மேல் செடிகளும் வளர்த்து பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது.

                       - என்று அடிப்படை வசதிகளே முழுமையாக கிடைக்காமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்றனர். அடிப்படை வசதிகளே இல்லாத போது  எப்படி நிம்மதியாக வாழ இயலும் என்பதே அவர்கள் எழுப்பும் கேள்வியாக இருக்கிறது. 

               ஆக , உணவு, கல்வி,சுகாதாரம் , இருப்பிடம்,போக்குவரத்து,மருத்துவம் என்று எட்டு திசையிலும் பிரசனைகளால் சூழபட்டிருக்கும் இம்மக்களின் அவல குரலுக்கு அரசாங்கம் என்ன பதில் வைத்துள்ளதோ ?. அந்த பதில் அவர்கள் இழந்ததை எப்படி திருப்பி கொடுக்கும் ?

            ஆனால் , அவர்களின் குரல் மேலதிகாரிகளுக்கு எட்டிவிடாமல் இடை அதிகாரர்களால் தடுக்கப்படுகிறது. மூடி மறைக்கப்படுகிறது . இதற்கு என்ன தீர்வு கிடைக்குமோ ?

Wednesday, 8 March 2017

தமிழகத்தில் நடப்பது இன அழிப்பா?



            இன்று தமிழ் இனத்தை அழிப்பதற்காக நிலம், நீர், காற்று, கல்வி, வேலை வாய்ப்பு, மருத்துவம் , வேளான்மை, பொருளாதாரம்,அரசியல், நீதி, கலாச்சாரம் போன்ற பலவழிகளில் செயல்பட்டு வருகிறார்கள். இதற்காக அவர்கள் கையிலெடுத்து இருப்பது: ஹைட்ரோ கார்பன் திட்டம், பெப்சி, கோக் ஆலைகளுக்கு அனுமதி, குலக் கல்வி முறை, நீட் தேர்வு, ரூபெல்லா ஊசி, விவசாயத்திற்க்கு தண்ணீர் கொடுக்காதது, காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காதது, வேளாண்மை கல்லூரிகளின் மூலம் செயற்கை உரம், பெட்ரோல் விலையேற்றம், ஊழல், தமிழர்களுக்கு எதிராக நீதி, மீனவர்கள் சுட்டுக் கொலை, ஆதிச்சநல்லூர், கீழடி அகழ்வாராய்ச்சி நிறுத்தம் என்று இன்னும் பல தொகுத்துக் கொண்டே போகலாம். மறைமுகமாகவும் பல நூறு செயல்பாடுகள் நடந்துக் கொண்டே இருக்கிறது.
           
             இவற்றால் நம் வரலாறு, நம் தலைமுறைகள் என்று அனைத்தும் அழிக்கப்படுகிறது. பல ஆயிரக்கணக்கான மக்கள் நீதிக் கிடைக்காமல், சரியான கல்விக் கிடைக்காமல், வேலைவாய்ப்புக் கிடைக்காமல், பொருளாதாரத்தில் முன்னேற்றம் இல்லாமல், சொந்தங்களை இழந்து, கணவன், மனைவி, மகன், மகள், அப்பா, அம்மா என்ற உறவுகளை இழந்து, சொந்த மண்ணிலே அகதிகளாக அலைக்கழிக்கப்படுகிறார்கள்.

              இவற்றை நாம் எப்படி ஈடு செய்யப்போகிறோம்? நாம் இழந்ததை எப்போது திரும்பப் பெறப்போகிறோம்? அரசாங்கமோ ! தொடர்ந்து கடிதங்களை மட்டுமே எழுதிக்கொண்டு இருக்கிறது. ஆபத்தான திட்டங்கள் வரும்போது நமக்கு எதிராகவும் நிற்கிறது. தன்னார்வத்தோடு பலர் இச்சட்டங்களுக்கு எதிராகவும் அவர்களுக்கு எதிராகவும் போராடுகிறார்கள். நம் போராட்டம் எப்பவுமே அறவழிப்போராட்டமாகவே அமைந்து விடுகிறது. நம் முன்னோர்கள் கையாண்ட அறவழிப்போராட்டத்தையே நாமும் மேற்கொண்டு வருகிறோம். அறவழியே சிறந்த வழி. ஆனால், இந்த அறவழிப் போராட்டத்தால் நம் மக்களும் பாதிக்கப்படுகிறார்களே. இதற்கு என்னதான் தீர்வு?

                 நம்மிடையே கலகத்தை ஏற்படுத்தியவர்கள், ஆபத்தான சட்டத்தை உருவாக்கியவர்கள், நம் வளத்தை, பொருளாதாரத்தை சுரண்டுபவர்கள் நிம்மதியாக இருக்கிறார்களே… குறிப்பிட்ட பகுதிக்குள்ளே அறவழிப்போராட்டத்தில் ஈடுபடுவதால் பொருளாதாரம், நேரம் என்ற பாதிப்புக்களும் ஏற்படுகிறது. அதுவும் நமக்கு தானே… நம்முடைய பாதிப்புக்களை அவர்கள் உணர வேண்டும். அவர்களுடைய கவனத்தை நம்மீது ஈர்க்க வேண்டும்.


                  நம் இனத்தை, நம் கலாச்சாரத்தை, நம் வளங்களை, நம் தலைமுறையை காக்க விரைந்து செயல்படவேண்டும்.