மற்றவர்களின் கையை
எதிர்பார்த்திருந்த
நான்
மற்றவர்கள் என்
கையை எதிர்பார்க்க
ஆசைக் கொள்ளவில்லை
எதிர்பார்க்காமல்
எதிர்பாராத சமயம்
எதிர்பாராத விதமாய்
இடக்கைக்கு தெரியாமல்
கொடுக்கத்தான்
ஆசை,
ஆனால் அதற்கு,
என்கை
இன்னும் கீழே தான்
இருக்கிறது
மேலிருக்கும் கையை
நோக்கியவாறு….
No comments:
Post a Comment