Tuesday, 14 February 2017

ஒரு ஊர்ல....







                     




       ஒரு ஊர்ல ஒரு பெரிய குளம் இருந்துச்சி . அந்த குளத்தால் தான் பல பேர் வாழ்த்துக்கிட்டு இருந்தாங்க . அந்த ஊர் மக்களும் அந்த குளத்து மீன்களைத்தான் சமைச்சி சாப்பிட்டுக்கிட்டு வந்தாங்க . அந்த மக்களுக்கு எந்த நோயும் வரல. சந்தோசமா இருந்தாங்க. ஏன்னா ? அவங்களுக்கு தேவையான சக்தியை அந்த குளத்து மீன்கள் குடுத்திச்சி . மீன்களை அவங்க மற்ற ஊர்களுக்கும் ஏற்றுமதி செய்தாங்க.
                    பக்கத்து ஊர்ல ஒரு டாக்டர் இருந்தார். அவருக்கு இவங்க சந்தோசமா நோயில்லாம இருக்கிறதுனால நோயாளின்னு அவரு ஆஸ்பத்திரிக்கு யாரும் வருறது கிடையாது. இதுக்கு ஏதாவது செய்யணுமேன்னு யோசித்தார். 
                                    மறுநாள் அந்த குளத்துல யாரோ காப்பாத்துங்கன்னு கத்துறத பாத்துட்டு , அந்த ஊர்காரங்க காப்பாத்த முயற்சி செய்தாங்க . அவங்ககிட்ட சாதாரண படகு இருந்ததுனால அவங்களால நாடு குளத்துக்கு போகமுடியல .

                   உடனே பக்கத்து ஊர்ல இருந்து மோட்டார் படகுகளை கொண்டுவந்து நடுக்குளத்துக்கு போனாங்க . போகும்போது திடீர்னு மோட்டார் படகுகள் ஒண்ணோடுஒன்னு மோதி அதுல இருந்த எண்ணெய் டிரம் எல்லாம் உடைஞ்சி  குளத்துல பரவ ஆரம்பிச்சது .

              உயிருக்கு போராடிய அந்த நபரை காப்பாத்திட்டாங்க . ஆனா கொஞ்ச நேரத்துலயே அந்த எண்ணெய்  குளம் முழுசா பரவ ஆரம்பிச்சது.

                ஊர் தலைவருக்கு இந்த செய்தி கிடைச்சும் எதுமே செய்யல.... ஊர்ல இருந்த இளைஞர்கள் வந்து எண்ணையை அள்ள ஆரம்பிச்சாங்க .கூட்டம் கொங்சம் கொஞ்சமா சேந்தது . 
                
               மோட்டரை பயன்படுத்தினா எண்ணையை சீக்கிரம் அள்ளிடலாம் ன்னு ஒரு கூட்டம் ஊர் தலைவரை பாக்க போனாங்க . 

         ஊர் தலைவர், அந்த  பக்கத்து ஊர் டாக்டரோட பேசிக்கிட்டு இருந்தார். விஷயத்தை சொன்னதும் , அப்படியா.... சரி..... எண்ணையை சீக்கிரம் அள்ள எல்லாருக்கும் வாளி வாங்கி குடுங்க வேலை சீக்கிரம் முடிஞ்சிடும்ன்னு சொல்லிட்டு மறுபடியும் அந்த டாக்டர் கூட பேச வீட்டுக்குள்ள போயிட்டாரு. 
      பாவம் அந்த ஊர் மக்கள் இரவும் பகலும் அந்த குளத்தை  காப்பாத்த எண்ணையை வெறும் வாளியை வச்சி அள்ளிக்கிட்டு இருந்தாங்க....